Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

யாழில் தமிழரின் தொல்பொருள் அடையாளங்கள் கண்டுபிடிப்பு!

T

The Leader Desk

மார்ச் 30, 2021 • 10:22 AM

யாழில் தமிழரின் தொல்பொருள் அடையாளங்கள் கண்டுபிடிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட தொல்லியல் அகழ்வு அதிகாரி மணிமாறன் தலைமையில் குறித்த எச்சங்கள் மீள்நிர்மாணம் செய்யப்பட்டது.
  • அக்காலப்பகுதியில் வீதியால் போக்குவரத்தை மேற்கொள்பவர்கள் மற்றும் சுமையை சுமந்து வருபவர்கள் சுமையை சுமைதாங்கியில் இறக்கி வைத்து களைப்பாறி நீர் அருந்தி விட்டு செல்லும் வகையில் குறித்த குடிநீர் கிணறும், சுமைதாங்கியும் அமைந்துள்ளது.
  • இது 1960 ஆம் ஆண்டுவரை பாவனையில் இருந்ததாகவும் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் சிதைவடைந்திருந்தது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட தொல்லியல் அகழ்வு அதிகாரி மணிமாறன் தலைமையில் குறித்த எச்சங்கள் மீள்நிர்மாணம் செய்யப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடமராட்சியில் இருந்து போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வீதியோரமாக வரணிப் பகுதியில் இந்த தொல்பொருள் எச்சங்கள் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

அக்காலப்பகுதியில் வீதியால் போக்குவரத்தை மேற்கொள்பவர்கள் மற்றும் சுமையை சுமந்து வருபவர்கள் சுமையை சுமைதாங்கியில் இறக்கி வைத்து களைப்பாறி நீர் அருந்தி விட்டு செல்லும் வகையில் குறித்த குடிநீர் கிணறும், சுமைதாங்கியும் அமைந்துள்ளது. இது 1960 ஆம் ஆண்டுவரை பாவனையில் இருந்ததாகவும் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் சிதைவடைந்திருந்தது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு இருந்த குறித்த தொல்லியல் எச்சங்கள் தற்போது வீதி அகழ்வு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டு தொல்லியல் அகழ்வு அதிகாரிகளால் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த அளவுகளில் தற்போது மீள்நிர்மாணம் செய்யப்பட்டுமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...