Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

பொத்துவில் பிரதேசத்தில் புத்தர் சிலை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது!

T

The Leader Desk

மார்ச் 29, 2021 • 11:30 AM

பொத்துவில் பிரதேசத்தில் புத்தர் சிலை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அங்கு வந்த பௌத்தபிக்கு தலைமையிலான குழுவினருக்கு பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததையடுத்து அவர்கள் பின்வாங்கினர்.
  • “பதிலுக்கு பிக்குமார், இது வன இலாகா கட்டைபோட்ட பகுதிதானே நாங்கள் சிலை வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று வாதம் புரிந்தார்கள்.
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் த.சுபோதரன் மக்களுடன் சமுகமளித்து, அங்குவந்த பிக்குமாரிடம் நியாயத்தை எடுத்துரைத்ததும் அவர்கள் ஏற்றுக்கொண்டு பின்வாங்கினர்.
எழுத்து அளவு:

அங்கு வந்த பௌத்தபிக்கு தலைமையிலான குழுவினருக்கு பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததையடுத்து அவர்கள் பின்வாங்கினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் த.சுபோதரன் மக்களுடன் சமுகமளித்து, அங்குவந்த பிக்குமாரிடம் நியாயத்தை எடுத்துரைத்ததும் அவர்கள் ஏற்றுக்கொண்டு பின்வாங்கினர்.

இது தொடர்பில் உறுப்பினர் சுபோதரன் தெரிவிக்கையில், “பொத்துவில், முகுதுமகாவிகாரை பௌத்தபிக்கு தலைமையிலான குழுவினர் எமது மயானப்பகுதியில் புத்தர்சிலை அமைப்பதற்காக கொங்கிரீட் தூண் முதலான பொருட்களுடன் வந்திறங்கினர். இது விடயம் மக்களுக்குத் தெரியவரவே, அங்கு மக்கள் ஒன்றுகூடியமையால் நிலைமை பதற்றத்துக்குள்ளானது.

“நானும் அங்குசென்று, அவர்களிடம் இது எமது பிரதேச மயானம். இதற்குள் புத்தர் சிலை அமைப்பதை எமது மக்கள் விரும்பவில்லை. எனவே, முயற்சியை கைவிடுங்கள் என்றேன்.

“பதிலுக்கு பிக்குமார், இது வன இலாகா கட்டைபோட்ட பகுதிதானே நாங்கள் சிலை வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று வாதம் புரிந்தார்கள். மக்களின் காணிகளை வன இலாகா கட்டைபோட்டு வைத்துள்ளது. அதைவிட இது மக்கள் வாழும்பகுதி. அவர்கள் இங்கு புத்தர் சிலை வருவதை விரும்பவில்லை. எனவே, இங்கு பிரச்சினையை எழுப்ப வேண்டாம் என்றேன்.

“அவர்கள் எனது வாதத்தை ஏற்றுக்கொண்டு, கொண்டுவந்த பொருட்களுடன் கிளம்பினர். பிரச்சினை தீர்ந்தது” என்றார்பிரதேச சபை உறுப்பினர் த.சுபோதரன்.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...