Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

சுயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

T

The Leader Desk

மார்ச் 27, 2021 • 12:44 PM

சுயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கால்வாயில் சிக்கியுள்ள மிகப்பெரிய கப்பலை உடனடியாக நீக்க முடியவில்லை என்றால் அது இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
  • எவர்கிவன் என்ற இந்த கப்பல் சுமார் 20,000 கொள்கலன்களைக் கொண்டுள்ளதுடன், அது சுமார் 200,000 டன் எடை கொண்டதென தெரிவிக்கப்படுகின்றது.
  • உலக வர்த்தகத்தில் சுமார் 12 வீதமான பொருட்கள் சுயஸ் கால்வாயின் வழியாகச் செல்கின்றன.
  • இதேவேளை, மசகு எண்ணெய் ஏற்றுமதிக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் காரணமாக, சர்வதேச சந்தைகளில் மசகு எண்ணெய் விலை 4 வீதம் உயர்ந்துள்ளது என்று ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

கால்வாயில் சிக்கியுள்ள மிகப்பெரிய கப்பலை உடனடியாக நீக்க முடியவில்லை என்றால் அது இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தைவானின் எவர்க்ரீன் மெரைன் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி. எவர்கிவன் என்ற இந்த கப்பல் சுமார் 20,000 கொள்கலன்களைக் கொண்டுள்ளதுடன், அது சுமார் 200,000 டன் எடை கொண்டதென தெரிவிக்கப்படுகின்றது.

கால்வாயை அடைத்துக்கொண்டு நிற்கும் இந்தக் கப்பலை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு வாரங்கள் பிடிக்கலாம் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அதிக சிரமங்களுக்கு இடையே அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

இதனால் உலகளவில் கப்பல் வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எகிப்து கப்பல்கள் அனைத்தையும் அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்துள்ளது.

குறுகிய காலத்துக்கு நிறுவனங்கள் அவற்றின் கப்பல்களை மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடுவதைத் தவிர வேறுவழி இல்லை.

கப்பல் அங்கு சிக்கியிருப்பதால் பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தகத்தில் சுமார் 12 வீதமான பொருட்கள் சுயஸ் கால்வாயின் வழியாகச் செல்கின்றன.

இதேவேளை, மசகு எண்ணெய் ஏற்றுமதிக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் காரணமாக, சர்வதேச சந்தைகளில் மசகு எண்ணெய் விலை 4 வீதம் உயர்ந்துள்ளது என்று ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் 20 க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர்கள் இந்த நெரிசலில் பாதிக்கப்பட்டுள்ளதாக கெப்லர் எரிசக்தி புலனாய்வுச் சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

சுயஸ் கால்வாயில் இதுவரை தரைதட்டிய மிகப்பெரிய கப்பல் இதுவாகும் என்றும் கரையோரமாகத் தரை தட்டியதால், மீண்டும் மிதக்கும் திறனை அது இழந்து விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கப்பலை இயக்க முடியாத பட்சத்தில், அந்த அதிக அலைச் சூழலில் சரக்குகளை அகற்றும் பணியை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 19,000 கப்பல்கள் இக்கால்வாய் வழியாக சென்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 51.5 கப்பல்கள் பயணிப்பதாக சுயஸ் கால்வாய் ஆணையம் குறிப்பிடுகிறது.

2017 ஆம் ஆண்டில், ஜப்பானிய கொள்கலன் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக இக்கால்வாயில் சிக்கியது. எகிப்திய அதிகாரிகள் இழுவைப் படகுகளின் உதவியோடு சில மணி நேரங்களுக்குள் மீண்டும் அதை மிதக்க வைத்தனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சுயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு! | Tamil Leader | We Lead the Nation