Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி அறிந்திருக்கவில்லை' - மைத்திரி மீண்டும் வலியுறுத்து!

T

The Leader Desk

மார்ச் 26, 2021 • 8:29 AM

'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி அறிந்திருக்கவில்லை' - மைத்திரி மீண்டும் வலியுறுத்து!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்றில் இன்று காலை உரையாற்றிய போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
  • தாக்குதலின் பின்னர் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர் ஒருவர் போலிப் பிரச்சாரம் செய்ததாகவும் அதனை மக்கள் நம்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • எவ்வாறெனினும், தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தாக்குதல் பற்றிய விபரங்கள் கிடைக்கப் பெற்றிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

நாடாளுமன்றில் இன்று காலை உரையாற்றிய போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தாக்குதல் பற்றிய விபரங்கள் கிடைக்கப் பெற்றிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தாக்குதல் சம்பவமொன்று இடம்பெறும் என அறிந்திருந்தால் தாம் உடனடியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி, தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தேக நபர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியிருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலின் பின்னர் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர் ஒருவர் போலிப் பிரச்சாரம் செய்ததாகவும் அதனை மக்கள் நம்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் போதைப் பொருளை ஒழிக்கவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதிகள் மீளவும் இவ்வாறான தாக்குதல்களை நடத்த மாட்டார்கள் என எவராலும் கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக அராசங்கம் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...