Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

தலைமன்னார் ரயில் - பஸ் விபத்து; புகையிரத காப்பாளர்கள் பணி விலகல்!

T

The Leader Desk

மார்ச் 23, 2021 • 10:32 AM

தலைமன்னார் ரயில் - பஸ் விபத்து; புகையிரத காப்பாளர்கள் பணி விலகல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இரண்டு புகையிரத கடவை நிலையத்தினை சேர்ந்த 6 காப்பாளர்கள் பணி விலகல் கடிதத்தினை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக வடக்கு, கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் றெகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
  • அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 16ஆம் திகதி தலைமன்னாரில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கும், அவனின் குடும்பத்திற்கு அனுதாபத்தினை தெரிவிக்கின்றோம்.
  • கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தின் பின் புகையிரத கடவை ஊழியர்கள் மன அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
  • காரணம் ஜனாதிபதி செயலகத்துடன் கதைத்து வருகின்றோம்.
எழுத்து அளவு:

இரண்டு புகையிரத கடவை நிலையத்தினை சேர்ந்த 6 காப்பாளர்கள் பணி விலகல் கடிதத்தினை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக வடக்கு, கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் றெகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 16ஆம் திகதி தலைமன்னாரில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கும், அவனின் குடும்பத்திற்கு அனுதாபத்தினை தெரிவிக்கின்றோம். இந்த விபத்தானது புகையிரத திணைக்களத்தின் முழுமையான பொறுப்புக்கூறலேயாகும்.

வடக்கு, கிழக்கு எங்கும் புகையிரத கடவையில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் புகையிரத திணைக்களத்தின் நேர அட்டவணை வழங்கப்படுவதில்லை.

புகையிரத சமிக்ஞையினை காண்பிக்கும் சிவப்பு, பச்சை நிற கொடிகள் வழங்கப்படவில்லை. 2013ஆம் ஆண்டு 180 நாட்கள் அரச சேவையில் பணியாற்றி இருந்தால் சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற சட்டத்திற்கமைய உள்வாங்கப்பட்ட புகையிரத கடவை பணியாளர்களுக்கு நாளாந்தம் 250 ரூபா பொலிஸ் திணைக்களம் ஊடாக வழங்கப்படுவதுடன் எமக்கான முழுமையான பராமரிப்பிற்கு பொலிஸ் திணைக்களங்களே பொறுப்புக் கூறுகின்றன.

இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் பாதுகாப்பு கடவை ஊழியர்களை பாதிக்கும் விதத்தில் செயற்படுகின்றனர். சரியான விசாரணையினை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் நீதி சரியான முறையில் நிலைநாட்டப்பட வேண்டும்.

கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தின் பின் புகையிரத கடவை ஊழியர்கள் மன அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தலைமன்னார் பகுதியில் உள்ள இரண்டு கடவையில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் ஆறு பேர் தங்கள் பதவி விலகலை பொலிஸ் நிலையத்தில் கொடுத்துள்ளார்கள்.

இந்த கடவைக்குச் சரியான பாதுகாப்பினை பொலிஸாரே வழங்க வேண்டும். எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக எங்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் ஜனாதிபதி செயலகத்துடன் கதைத்து வருகின்றோம்.

எதிர்வரும் நான்காம் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக நிரந்தர நியமனம் தொடர்பிலான நிலைப்பாட்டினை அரசு முன்வைக்க தவறும் பட்சத்தில் நாடு தழுவிய ரீதியில் உள்ள 2064 புகையிரத கடவை ஊழியர்களும் ஒருமித்து இடைவிலகல் தொடர்பில் கலந்தாலோசித்து வருகின்றோம்.

வடக்கு, கிழக்கில் 145 புகையிரத கடவைகளில் 450 இற்கும் உட்பட்ட ஊழியர்கள் கடமையாற்றி வருகின்றார்கள்.

வடக்கு, கிழக்கில் சுமார் 25 கடவைகள் முழுமையாகப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. காரணம் 250 ரூபா சம்பளம் பொலிஸாரின் அச்சுறுத்தல்கள், பழிவாங்கல்கள், தொலைப்பேசி செயற்பாடுகளால் ஊழியர்கள் இடைவிலகியுள்ளார்கள்.

அரசினால் ஊழியர் நலன்சார்ந்த எந்த திட்டங்களும் முன்வைக்கப்படுவதில்லை கொட்டகை வசதியில்லை, மின்சார வசதி இல்லை, குடிநீர் வசதியில்லாத நிலையில் கடவைகள் பழுதடைந்துள்ள நிலையிலும் பெரும்பாலான இடங்களில் தடைகளே இல்லை ஊழியர்களே தங்கள் கையினால்தான் சைகையினை காட்ட வேண்டும்.

புகையிரதம் வருகின்றது என்று சொன்னால் கண்ணால் கண்டு அல்லது அதன் சத்தத்தினை காதால் கேட்டுதான் பாதுகாப்பினை வழங்குகின்றோம். கடந்த ஏழு ஆண்டுகளாக இவ்வாறு பணியாற்றும் ஊழியர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மன்னார் விபத்து தொடர்பில் புகையிரத காப்பாளர் மீது தான் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில்,

இந்த குற்றச்சாட்டினை மறுக்கின்றோம். அன்று 2.20 மணிக்கு வரவேண்டிய புகையிரதம் 1.55இற்கு வருகின்றது.

அந்த இடத்தில் கொட்டகை இல்லாத காரணத்தினால் காவலாளி 50 மீற்றர் தூரத்தில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் தான் இருக்கின்றார்.

புகையிரத திணைக்களத்தின் முழுமையான தவறு அங்கு இடம்பெற்றுள்ளது. பேருந்தின் சாரதி அந்த இடத்தில் அவதானித்துச் சென்றிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...