Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

சிக்குமா இலங்கை? வாக்கெடுப்பு இன்று : ஆதரவு கோரி இறுதி நேரப் பிரயத்தனம்

T

The Leader Desk

மார்ச் 23, 2021 • 6:58 AM

சிக்குமா இலங்கை? வாக்கெடுப்பு இன்று : ஆதரவு கோரி இறுதி நேரப் பிரயத்தனம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று திங்கட்கிழமை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று வரை பிற்போடப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 47 நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ள நிலையில், பிரேரணை தொடர்பில் தமது நட்பு நாடுகளுடன் பேசி, ஆதரவு பெறும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
  • குறிப்பாக அரபு நாட்டுத் தலைவர்களுடன் இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நேரடியாக பேசி ஆதரவு திரட்டியுள்ளனர்.
  • மார்ச் 23ஆம் திகதி வரை நடைபெறும் ஐ.நா.
எழுத்து அளவு:

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று திங்கட்கிழமை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று வரை பிற்போடப்பட்டது. கொவிட் நெருக்கடி காரணமாக இம்முறை அமர்வுகள் காணொளி தொழில்நுட்பம் மூலம் நடத்தப்படுகிறது.

இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமை பாதுகாப்பு ஆகிய விடயங்கள் குறித்த யோசனையொன்றை, ஐக்கிய இராச்சியம், ஜேர்மன், கனடா, வடக்கு மொசிடோனியா, மொன்டினீக்ரோ, மலாவி ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 47 நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ள நிலையில், பிரேரணை தொடர்பில் தமது நட்பு நாடுகளுடன் பேசி, ஆதரவு பெறும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா, நோபாளம், பங்களாதேஸ் ஆகிய தெற்காசிய வலய நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இலங்கை சாதமான பதிலையும் பெற்றுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை சீனா, ரஸ்யா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் விமர்சித்திருந்தன.

இந்த நிலையில், மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிக்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவித்துள்ளன.

இலங்கை தொடர்பில் இதற்கு முன்னர் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளின் மீதான வாக்கெடுப்புகளிலும் இலங்கைக்கு சார்பாகவே பாகிஸ்தான் வாக்களித்திருந்தது.

இதேவேளை, ஐக்கிய இராச்சியம் கொண்டுவந்த பிரேரணைக்கு, கனடா, ஜேர்மன், மொன்டினிக்ரோ, வடக்கு மெசிடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன.

பிரேரணையைத் தோற்கடிக்க இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு, அங்கத்துவ நாடுகளுடன் பேசி, ஆதரவையும் திரட்டி வருகிறது. குறிப்பாக அரபு நாட்டுத் தலைவர்களுடன் இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நேரடியாக பேசி ஆதரவு திரட்டியுள்ளனர். இவற்றுக்கு சாதாகமான பதில்கள் கிடைத்துள்ளதாக இலங்கையின் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற இருதரப்பும் முயன்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

மார்ச் 23ஆம் திகதி வரை நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை குறித்த விவாதமும் நடைபெற்ற நிலையில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் அங்கம் வகித்தாலும், ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் வாக்காளிக்க 47 நாடுகள் மட்டுமே தகுதிபெற்றுள்ளன.

இந்த நிலையில், இம்முறை இலங்கை குறித்து கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை எதிர்த்து அதாவது இலங்கைக்கு ஆதரவு வழங்க 21 நாடுகள் இதுவரை இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கையின் இராஜதந்திரத் தரப்புத் தகவல்கள் மூலம் அறியமுடிந்தது. சில நாடுகள் நடுநிலை வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும் இந்த விவகாரத்தில் மௌனமாகவே இருக்கிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...