Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

வாகரை பிரதேசத்தில் முதன் முறையாக சட்டத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி!

T

The Leader Desk

மார்ச் 22, 2021 • 11:04 AM

வாகரை பிரதேசத்தில் முதன் முறையாக சட்டத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதேச வரலாற்றிலேயே முதன் முதல் சட்டத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டவராவார்.
  • இன் க.பொ.த.உயர்தரப் பெறுபேற்றில் கல்குடா கல்வி வலயத்தின் முதன்மைப் பெறுபேறான 2ஏ.பி யும், மாவட்ட நிலையில் 13இனையும் பெற்று பிரதேசத்தித்திற்கு பெருமை சேர்த்ததுள்ளார்.
  • அப்பிரதேசத்துக்கு வெளியிடங்களிலிருந்து கற்பிக்க வரும் அசிரியர்களின் பங்கும் மிகுந்த முக்கியத்துவமுடையதாக இருக்கிறது.
எழுத்து அளவு:

பிரதேச வரலாற்றிலேயே முதன் முதல் சட்டத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டவராவார்.

2019இன் க.பொ.த.உயர்தரப் பெறுபேற்றில் கல்குடா கல்வி வலயத்தின் முதன்மைப் பெறுபேறான 2ஏ.பி யும், மாவட்ட நிலையில் 13இனையும் பெற்று பிரதேசத்தித்திற்கு பெருமை சேர்த்ததுள்ளார். வாகரை வரலாற்றில் கடல்கோளாலும் யுத்தத்தாலும் மிகுந்த பாதிப்புற்ற நிலையில் அப்பிரதேசத்திலேயே கற்று சட்டத்துறை பிரவேசத்தை தொடக்கி வைத்த மாணவி இவரென்பது குறிப்பிடத்தக்கது.

வாகரையின் வரலாற்றில் கொடூரமான யுத்தத்தாலும் வறுமையாலும், பொருளாதார பேரிழப்பாலும் தொடர்ந்து பாதிப்புற்ற நிலையில் அதிலிருந்து மீண்டெழுந்துகொண்டிருக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதில் அப்பிரதேச கல்விபுலத்திலிருப்பவர்களால் மட்டும் முடிவதில்லை.

அப்பிரதேசத்துக்கு வெளியிடங்களிலிருந்து கற்பிக்க வரும் அசிரியர்களின் பங்கும் மிகுந்த முக்கியத்துவமுடையதாக இருக்கிறது. இத்தனைக்கும் இம்மாணவி .க. பொ.த.சாதாரண தரம் வரை மட்.வம்மிவட்டவான் வித்தியாலயத்திலேயே கல்வி கற்று உயர் தரத்துக்காக மட்/ பால்சேனை தமிழ் மகாவித்தியாலயத்தில் மிகுந்த வறுமையையும் இளவயதுத் திருமண அபாயங்களையூம் வென்று எவ்வித ரீயூசன் வசதிகளுமின்றி அதிகஷ்ட பிரதேச ஆசிரியர்களின் வழிகாட்டல்களை மட்டும் நம்பி உயர்தரம் கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவானவர். 

தான் ஒரு பட்டதாரியாக ஆசிரியராக ஆவதையே இலட்சியமாக கொண்டிருந்த இவரின் பெறுபெறு சட்டத்துறைக்கு தகுதியானதாக அமைந்த போதும் அவருக்கு அத்துறையினை பயில்வதற்கான வசதியோ விருப்பமோ இல்லாத நிலையில், வலயக் கல்வி பணிப்பாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலரது முயற்சியாலும்தான் சட்டத்துறைக்கே தனது விருப்பத் தெரிவை வெளிப்படுத்தியிருந்தார்.

அதன் அடிப்படையிலேயே இன்று யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைக்கு தெரிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை மீன் விற்கும் வியாபாரியாவார். அவர்களது குடும்பத்தின் வறுமைச் சுமையை வென்று சட்டமாணியை உருவாக்கும் முயற்சியில் அவர்களது குடும்பமே பக்கபமாக இருந்துள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

தினகரன் 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வாகரை பிரதேசத்தில் முதன் முறையாக சட்டத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி! | Tamil Leader | We Lead the Nation