Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!

T

The Leader Desk

மார்ச் 22, 2021 • 10:37 AM

வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அண்மையில் அரசாங்கத்தால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 6 பேர் மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
  • எனவே ஆசிரியர் வெற்றிடத்தை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கையினை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
  • இதன் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் அசங்க காஞ்சனகுமார, பாடசாலை விடுமுறை விடப்பட்டதையடுத்தே குறித்த 6 ஆசிரியர்களையும் வேறு செயற்திட்டத்திற்காக மீள அழைத்திருந்தோம்.
எழுத்து அளவு:

அண்மையில் அரசாங்கத்தால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 6 பேர் மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் பாடசாலை தவணை விடுமுறையையடுத்து அவர்கள் வேறு செயற்திட்டத்திற்காக மீள அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனால் தமது பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து,

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தை இன்று முற்றுகையிட்டிருந்தனர்.

ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் பின்னதங்கி உள்ளது. எனவே ஆசிரியர் வெற்றிடத்தை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கையினை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முற்றுகையிட்ட மக்கள் பிரதேச செயலகத்தின் நிர்வாக கட்டத்திற்குள் சென்றமையால் சற்றுநேரம் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதேச செயலாளர் போராட்டக்காரர்களுடன் முன்னெடுத்த பேச்சு வார்த்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டிருந்ததுடன், நிலைமை சுமூகமாகியிருந்தது.

இதன் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் அசங்க காஞ்சனகுமார,

பாடசாலை விடுமுறை விடப்பட்டதையடுத்தே குறித்த 6 ஆசிரியர்களையும் வேறு செயற்திட்டத்திற்காக மீள அழைத்திருந்தோம்.

எனினும் ஒருசில நாட்களில் அவர்களை மீண்டும் பாடசாலைக்கு நியமிப்பதற்கான நடவடிக்கையை ஏற்கனவே எடுத்து விட்டோம் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்! | Tamil Leader | We Lead the Nation