Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

'வடக்கு, கிழக்கை பௌத்தமயமாக்குவதை இலக்காக வைத்து தொல்லியல் திணைக்களம் செயற்படுகின்றது'

T

The Leader Desk

மார்ச் 21, 2021 • 10:53 AM

'வடக்கு, கிழக்கை பௌத்தமயமாக்குவதை இலக்காக வைத்து தொல்லியல் திணைக்களம் செயற்படுகின்றது'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இக் கலந்துரையாடலில் ஆலயத்தின் தொன்மைகள் தொடர்பாகவும் வரலாறுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போது மாவை சேனாதிராஜா குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
  • அரசாங்கத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் இராணுவத்தினர் பௌத்த பிக்குகள் சிலர் இங்கு வந்து சென்றுள்ளதுடன், வருகின்ற 23ஆம் திகதி அகழ்வுகளில் ஈடுபடவுள்ளதாக அறிய முடிகின்றது.
  • இந்த இடத்தினை இராணுவத்தினர் பல வருடங்களாக ஆளுகைக்குள் வைத்திருந்தனர்.
எழுத்து அளவு:

கிளிநொச்சி - உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்லியல் அடையாளமிருப்பதாகக் கூறி தொல்லியல் திணைக்களம் அகழ்வுகளை மேற்கொள்ள உள்ள நிலையில் இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக இன்றையதினம் ஆலய நிர்வாகத்தினருக்கும், தமிழ் அரசியல் தரப்புக்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் ஆலயத்தின் தொன்மைகள் தொடர்பாகவும் வரலாறுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போது மாவை சேனாதிராஜா குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

நாங்கள் அனைத்து விடயங்களிலும் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். அரசாங்கத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் இராணுவத்தினர் பௌத்த பிக்குகள் சிலர் இங்கு வந்து சென்றுள்ளதுடன், வருகின்ற 23ஆம் திகதி அகழ்வுகளில் ஈடுபடவுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த ஆட்சி, எங்களுடைய நிலங்கள் பாரம்பரியங்கள் இருக்கின்ற தெய்வ சந்நிதிகளிலே தங்களது பௌத்த சமயத்தினை நிலைநாட்டுவதற்காக தொல்லியல் திணைக்களம் என்னும் குழுவினை உருவாக்கிக் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தங்களது பௌத்த அடையாளங்கள் இருப்பதாகக் கூறி பௌத்த ஆலயங்களை நிலைநாட்டுவதாகவும் பரம்பெருக்களாக நாங்கள் ஆண்டு இருக்கின்றோம் என்பதை நிருபிப்பதற்காக தங்களது விருப்பப்படி தனியே பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட குழுவை நியமித்து உள்ளனர்.

பல ஆயிர வருடங்களாக இருக்கும் இந்த ஆலயத்தினை ஆராய்ச்சி செய்து பார்க்க இவர்கள் நிற்கின்றார்கள்.

இந்த இடத்தினை இராணுவத்தினர் பல வருடங்களாக ஆளுகைக்குள் வைத்திருந்தனர். அவர்களே இவ் ஆய்வினை செய்யப் பௌத்த குருமாருடன் ஆர்வமாக உள்ளனர். இவற்றை தடுப்பதற்கு நாங்கள் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தம்மிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து தடை உத்தரவைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் எங்களுடைய பிரதேசங்களை மற்றும் எங்களுடைய தெய்வங்கள் இருக்கின்ற இடங்களைப் பௌத்த ஆலயங்களாக அடையாளங்களாக உருவாக்கி அதனை நிரூபித்து இந்த பிரதேசம் தங்களுடையதென்றும் இந்த பூமி எங்களுடையது அல்ல தம்முடையது என வரலாற்று ஆவணங்களைத் தயாரிப்பதற்கு முயல்கின்றார்கள்.

இதற்கு நாங்கள் இடம் கொடுக்காது எமது மண்ணை நாங்கள் காப்பாற்ற சட்ட நடவடிக்கை மற்றும் போராட்டங்களை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'வடக்கு, கிழக்கை பௌத்தமயமாக்குவதை இலக்காக வைத்து தொல்லியல் திணைக்களம் செயற்படுகின்றது' | Tamil Leader | We Lead the Nation