Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

'புறக்கணிக்கப்படும் தமிழ் பிரதேசங்கள்' - வேலுகுமார் எம்.பி!

T

The Leader Desk

மார்ச் 21, 2021 • 10:14 AM

'புறக்கணிக்கப்படும் தமிழ் பிரதேசங்கள்' - வேலுகுமார் எம்.பி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புறக்கணிக்கப்பட்டே உள்ளது" என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலு குமார் தெரிவித்தார்.
  • எனினும் பிரதேச செயலக மட்டத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் அத்தேவையை பூர்த்தி செய்யாது உள்ளது.
  • இது தொடர்பாக அவர் மேலும் பின்வருமாறு குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

புறக்கணிக்கப்பட்டே உள்ளது" என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலு குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் பின்வருமாறு குறிப்பிட்டார்..

"தற்பொழுது நாடு முழுவதும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் மீள் நிர்ணயம் தொடர்பான முன்மொழிவுகள் பெறப்பட்டு வருகின்றது. அவை பிரதேச செயலக மட்டத்திலே தயார் செய்யப்பட்டு, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதியுடன், மீள் நிர்ணய ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்படுகின்றது.

கண்டி மாவட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள், உரிய தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. குறிப்பாக, தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களிலேயே கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அதிகரிப்பு தேவையாக உள்ளது. எனினும் புதிய முன்மொழிவுகளில் அவை உள்வாங்கப்படாது, புறக்கணிக்கப்பட்டே உள்ளது.

கண்டி மாவட்டத்தின் மிக அதிகமான சனத்தொகையையும், பரப்பளவையும் கொண்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிகமாக இருப்பது தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் ஆகும். விசேடமாக, முஸ்லீம் மக்கள் வாழுகின்ற பகுதிகளும், அதே போன்று, பெருந்தோட்ட பகுதிகளும் இத்தகைய நிலையில் உள்ளது. அப்பகுதிகளில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அதிகரிக்கவே கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். எனினும் பிரதேச செயலக மட்டத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் அத்தேவையை பூர்த்தி செய்யாது உள்ளது.

குறிப்பாக, கம்பளை உடபலாத்த, தொழுவ பிரதேச செயலக பிரிவுகள், நாவலபிட்டிய, பஸ்பாகே கோரல, குண்டசாலை மற்றும் அக்குறணை பிரதேச செயலக பிரிவுகளில் பொருத்தமான முன்மொழிவுகள் செய்யப்படவில்லை. சனத்தொகை நான்காயிரம், ஐயாயிரத்திற்கு அதிகமான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை கூட, இரண்டாக பிரிப்பதற்கு சிபாரிசு செய்யப்படவில்லை.

நிர்வாக அதிகார பகிர்வின் முக்கியமான ஒரு அம்சமாக கிராம உத்தியோகத்தர் பிரிவு காணப்படுகின்றது. அதே போன்று அரசியல் அதிகார பகிர்விற்கான முக்கியத்துவத்தையும் இது அதிகரிக்கின்றது. பல ஆண்டுகளுக்கு ஒரு தடவையே இந்த மீள் நிர்ணயம் நடைபெறுகின்றது. எனவே இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது. இது தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது எம் அனைவரினதும் கடப்பாடாகும். அதிலும் அரசாங்க தரப்பில் உள்ள எங்கள் பிரதிநிதிகள் இவை தொடர்பாக தேடி பார்த்து அவசியமான அழுத்தங்களை அரசசுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாது இருப்பது ஏன் என்பதே கேள்வியாக உள்ளது."

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...