Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

'தான், கல்வி கற்காத விடயத்தை, விமல் வீரவன்சவே காட்டிக்கொடுத்துவிட்டார்' - ராஜித்த!

T

The Leader Desk

மார்ச் 19, 2021 • 7:13 AM

'தான், கல்வி கற்காத விடயத்தை, விமல் வீரவன்சவே  காட்டிக்கொடுத்துவிட்டார்' - ராஜித்த!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனினும், கறுவாவிலிருந்து வரும் புகை எந்தத் தீங்கையும் விளைவிக்காதென எங்கும் உறுதிப்படுத்தப்படவில்லை.
  • இதுவே படித்தவர்களுக்கு இலங்கையில் கிடைக்கும் மதிப்பு.
  • எமது ஆட்சிக் காலத்திலும் கருவா மூலம் தயாரிக்கப்பட்ட புகைப்பொருள் கொண்டு வரப்பட்டது.
எழுத்து அளவு:

உள்ளூர் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட புகைப்பொருளை, அமைச்சர் விமல் வீரவன்ச புகைத்துக்காட்டுவதான படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில், இது குறித்து கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த ராஜித்த எம்.பி மேலும் கூறியதாவது,

'புகையிலை அடங்கிய புகைப்பொருளிலிருந்து வரும் புகை உயிர்கொல்லியாகும். எனினும், கறுவாவிலிருந்து வரும் புகை எந்தத் தீங்கையும் விளைவிக்காதென எங்கும் உறுதிப்படுத்தப்படவில்லை. எமது ஆட்சிக் காலத்திலும் கருவா மூலம் தயாரிக்கப்பட்ட புகைப்பொருள் கொண்டு வரப்பட்டது.

 
ஆனால், இது குறித்து எவ்வித தீர்மானங்களையும் எடுக்காமல், விசேட நிபுணர்களான நாடா நிறுவனத்திடம் ஆலோசனைகளைக் கேட்டோம். நாடா நிறுவனத்தின் தலைவரான பாலித அபேகோன் உலக சுகாதார அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசேட வைத்திய நிபுணராவார். எனினும் அவ்வாறான ஒரு நபரை இந்த அரசாங்கம் ஒளடத அதிகார சபையிலிருந்து பதவி நீக்கியது. இதுவே படித்தவர்களுக்கு இலங்கையில் கிடைக்கும் மதிப்பு.
 
புகைப்பது இன்று நகைப்புரிய விடயமாக மாறி விட்டது. அந்த நகைச்சுவைக்கு சொந்தகாரர்களான அமைச்சர்கள் தான் இந்த நாட்டைப் பாதுகாக்கும் தேசாபிமானிகள் எனத் தங்களை அடையாளப்படுத்துகின்றனர்.
 
'தான், கல்வி கற்காத விடயத்தை, விமல் வீரவன்சவே  காட்டிக்கொடுத்துவிட்டார். ஆட்சியிலிருப்பது சரியான அரசாங்கமாயின்,  முழு நாட்டு மக்களுக்கே புகைப்பிடித்துக் காட்டும் இந்த அமைச்சரை அமைச்சரவையிலிருந்து துரத்த வேண்டும்'  என்றார்.
 
கள்ளமாகத் தயாரிக்கப்படும் அதிக செறிவைக்கொண்ட பானத்தை ஒன்றும் இல்லையெனக் கூறி, இன்னோர் அமைச்சர் குடித்துக் காட்டுவாரெனத் தெரிவித்த ராஜித சேனாரத்ன எம்.பி, முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தவறான விடயங்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்படக் கூடாது என்றார். 
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...