Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

'மத்ரசா பாடசாலைகள் என்றால் என்ன என்பதை சரத் வீரசேகர முதலில் புரிந்துகொள்ள வேண்டும்'

T

The Leader Desk

மார்ச் 18, 2021 • 12:34 PM

'மத்ரசா பாடசாலைகள் என்றால் என்ன என்பதை சரத் வீரசேகர முதலில் புரிந்துகொள்ள வேண்டும்'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் மேலும் கூறுகையில், மத்ரசா பாடசாலைகளை தடை செய்ய வேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
  • ஒரு சிலரது தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கற்பித்தலை முன்னெடுத்தல் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட வேண்டும்.
  • இராணுவத்தின் சேவையாற்றிய போது படைகளுக்கு கட்டளையிட்டதைப் போன்று நாட்டை ஆட்சி செய்ய முடியாது என அவரிடம் தெரிவிக்க விரும்புகின்றோம்.
எழுத்து அளவு:

அவர் மேலும் கூறுகையில்,

மத்ரசா பாடசாலைகளை தடை செய்ய வேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இராணுவத்தின் சேவையாற்றிய போது படைகளுக்கு கட்டளையிட்டதைப் போன்று நாட்டை ஆட்சி செய்ய முடியாது என  அவரிடம் தெரிவிக்க விரும்புகின்றோம். மத்ரசா பாடசாலைகள் என்றால் என்ன என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மத்ரசா பாடசாலைகள் என்பது ஏனைய மதங்களில் காணப்படும் அறநெறி பாடசாலைகளை ஒத்ததாகும். எனவே ஒவ்வொருவரின் தேவைக்கமைய இவற்றை தடை செய்ய முடியாது. ஒரு சிலரது தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கற்பித்தலை முன்னெடுத்தல் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் இதனை கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து மதகல்வி தொடர்பான சட்டத்தை உருவாக்கி கற்பித்தல் முறைமை ஒழுங்குபடுத்த வேண்டும்.

அவ்வாறில்லாமல் தடை செய்ய அவசியமற்ற விடயங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறுவது அநாவசியமான விடயங்களாகும். இவை வெறுக்கத்தக்க பேச்சுக்களாகும் என்பதே எனது நிலைப்பாடாகும். மத்ரசா பாடசாலைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பில் யாராலும் குற்றஞ்சுமத்த முடியாது என்பதை நாம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளோம். எனவே அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக மக்கள் மத்தியில் பிரச்சினைகளை தோற்றுவிக்க யாருக்கும் இடமளிக்க முடியாது என்பதை அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு நினைவுபடுத்துகின்றோம் என்றார்.

வீரகேசரி 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...