Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

தோட்ட காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்க முன்னெடுப்பு!

T

The Leader Desk

மார்ச் 18, 2021 • 12:04 PM

தோட்ட காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்க முன்னெடுப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கண்டி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலு குமார் இதற்கெதிராக தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததையடுத்து, அபிவிருத்தி குழு கூட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டது.
  • இம்முன்மொழிவில், கண்டி தெல்தெனிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, ரங்களை தோட்டத்தின் கல்தூரியா பிரிவின் 100 ஏக்கர் காணியும், மெததும்பர பிரதேசத்தில் உள்ள வுக்ஸைட் தோட்டத்தின் 200 ஏக்கர் காணியும் விடுவிக்க கோரப்பட்டுள்ளது.
  • அதே வேலை அபிவிருத்தி தேவைகளுக்கு காணிகளை பயன்படுத்துவதாயின் தோட்ட மக்களின் பிரச்சினையை முதலிலே தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தேன்.
எழுத்து அளவு:

கண்டி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலு குமார் இதற்கெதிராக தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததையடுத்து, அபிவிருத்தி குழு கூட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரிடம் வினவிய போது, அவர் பின்வருமாறு தெரிவித்தார்.

"கண்டி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சின், பிரஜாசக்தி நிகழ்ச்சி திட்டத்தினூடாக, தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்குவதற்கான அனுமதி கோரி, முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

பெருந்தோட்டங்களில் வாழுகின்ற மக்களின், உரிமை மற்றும் நலன்களை பாதுகாப்பதற்கும், மேன்படுத்துவதற்கும் உள்ள அமைச்சினாலும், அதன் கீழ் இயங்குகின்ற "பிரஜாசக்தி" நிகழ்ச்சித் திட்டத்தினாலும் இவ்வாறான ஒரு முன்மொழிவு செய்யப்பட்டிருப்பது கண்டி மாவட்ட தோட்ட மக்களுக்கு செய்கின்ற மாபெரும் துரோகம் ஆகும்.

இம்முன்மொழிவில், கண்டி தெல்தெனிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, ரங்களை தோட்டத்தின் கல்தூரியா பிரிவின் 100 ஏக்கர் காணியும், மெததும்பர பிரதேசத்தில் உள்ள வுக்ஸைட் தோட்டத்தின் 200 ஏக்கர் காணியும் விடுவிக்க கோரப்பட்டுள்ளது. அவ்வாறு விடுவிக்கும் காணிகள் அதன் அருகாமையில் காணப்படும் கிராமங்களில் உள்ளவர்களுக்கு விவசாய நடவடிக்கைகளை செய்ய குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இத்தோட்டடங்களில் வாழுகின்ற மக்கள் கடந்த பல வருடங்களாக தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இவ்வாறான நிலையில், இம்மக்களை ஓரம்கட்டி, இத்தோட்ட பகுதிகளை வெளியாருக்கு வழங்க நமது பிரதிநிதிகளே முன்னிற்பது வேதனைக்குரியதாகும். இக்கூட்டத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கலந்துகொண்டு எனது கடுமையான எதிர்ப்பை முன்வைத்தேன். அதே வேலை அபிவிருத்தி தேவைகளுக்கு காணிகளை பயன்படுத்துவதாயின் தோட்ட மக்களின் பிரச்சினையை முதலிலே தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தேன். அதற்கு சபையில் கடுமையான எதிர்ப்பை சபையில் ஏனைய தரப்பினர் தெரிவித்தனர். "இது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான வேலை திட்டம், அதில் நீங்கள் கூறுவது போல் எல்லாம் செய்ய முடியாது" என்ற தொனியில் கருத்துக்களை முன்வைத்தனர். எனினும், தோட்ட மக்களின் நியாயத்தையும் இதில் உள்ள அசாதாரணத்தையும் மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டினேன்.

இத்தோட்டங்களில் வாழுகின்ற மக்கள் கடந்த பல வருடங்களாக தமது தொழிலை இழந்துள்ளனர். அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதி மற்றும் சேவைக்கால கொடுப்பனவுகள் கூட நிலுவையாக உள்ளது. இச்சூழலில், இருக்கின்ற காணிகளையும் பிரித்து வெளியாருக்கு கொடுக்கப்பார்க்கின்றனர். இந்நிலை முன்சென்றால் அம்மக்கள் லயன் அறைக்கு மட்டுப்படுத்தப்பட்டவர்களாக வாழ வேண்டி ஏற்படும். இதற்கு ஒருபோதும் நாம் சமூகமாக அனுமதிக்க முடியாது. இந்த அரசாங்கத்தில் மலையக மக்களை பிரதிநித்துவம் செய்பவர்கள் எமது மக்களுக்கு நல்லதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கெட்டதை செய்யாமல் இருந்தால் போதும், என்ற நிலையே இப்போது ஏற்பட்டிருக்கின்றது." என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...