Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

அணைத்து மாவட்டங்களிலும் எழுத்தாளர் சங்கம் அங்குரார்ப்பணம்!

T

The Leader Desk

மார்ச் 18, 2021 • 11:18 AM

அணைத்து மாவட்டங்களிலும் எழுத்தாளர் சங்கம் அங்குரார்ப்பணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான எழுத்தாளர் சங்கம் உருவாக்குவதுத் தொடர்பான கூட்டம், மாவட்ட உதவிச் செயலாளர் ஆ.நவேஸ்வரனினதும் மாவட்ட கலாசாரத் திணைக்களத்தினதும் ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் நேற்று (17) நடைபெற்றது.
  • இராஜாங்க அமைச்சின் சுற்று நிரூபத்துக்கு அமைய, மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தலா 3 பேரைக் கொண்டதாக மாவட்ட எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட வேண்டும்.
  • இதன்படி, மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்க நிறைவேற்றுத் தலைவராக மாவட்டச் செயலாளர் செயற்படுவதுடன், தலைவராக கலாநிதி முருகு தயாநிதி, உப தலைவர்களாக இரா.தவராஜா, கே.நௌஷாத், செயலாளராக வீ.மைக்கல் கொலின் ஆகியோர் செயற்படவுள்ளனர்.
எழுத்து அளவு:

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான எழுத்தாளர் சங்கம் உருவாக்குவதுத் தொடர்பான கூட்டம், மாவட்ட உதவிச் செயலாளர் ஆ.நவேஸ்வரனினதும் மாவட்ட கலாசாரத் திணைக்களத்தினதும் ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் நேற்று (17) நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சின் சுற்று நிரூபத்துக்கு அமைய, மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தலா 3 பேரைக் கொண்டதாக மாவட்ட எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட வேண்டும்.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து தலா 3 பேர் வீதம் மொத்தமாக 42 நபர்கள் தெரிவுசெய்யப்பட்டு மாவட்ட எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.

இதன்போது எழுத்தாளர் சங்க உறுப்பினர் தெரிவுகள் நடைபெற்றன. இதன்படி, மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்க நிறைவேற்றுத் தலைவராக மாவட்டச் செயலாளர் செயற்படுவதுடன், தலைவராக கலாநிதி முருகு தயாநிதி, உப தலைவர்களாக இரா.தவராஜா, கே.நௌஷாத், செயலாளராக வீ.மைக்கல் கொலின் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

அத்துடன், உப செயலாளராக திருமதி சுதாகரி மணிவண்ணன், பொருளாளராக கதிரவன். ரீ.இன்பராசா மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக திருமதி ரூபி வலன்டினா பிரான்சிஸ், ஜீனைதா ஷெரீப், ஏ.சீ.அப்துல் ரஹீமான், கே.அருளம்பலம், கலாபூஷணம் கே.தணிகாசலம், ஜிப்ரி ஹசன் ஆகியோரும் சபையோரால் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

எழுத்தாளர்களின் செயற்றிறனை விருத்தி செய்தல், துறைசார் நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுத்தல், சிறந்த ஆக்கங்களை உருவாக்குதல், எழுத்தாளர்களுக்கான உதவி, வழிகாட்டல், ஆலோசனை என்பவற்றை ஒரு கட்டமைப்பு ரீதியான செயற்பாட்டினூடாக வழங்குவதே, இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...