Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

முடிவுக்கு வரும் பிரதம நீதியரசரின் வழக்கு!

T

The Leader Desk

மார்ச் 17, 2021 • 8:09 AM

முடிவுக்கு வரும் பிரதம நீதியரசரின் வழக்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த குற்றப்பத்திரிகையில் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினை காணப்படுவதாக தெரிவித்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக செயற்பட்ட, தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் A.H.M.D.நவாஸ் மற்றும் மின்சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான M.M.C.பெர்டினாண்டோ ஆகியோர் வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாவர்.
  • எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தினால் நேற்று பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு இதுவரை நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைக்காத நிலையில், வழக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

குறித்த குற்றப்பத்திரிகையில் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினை காணப்படுவதாக தெரிவித்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜராகிய உதவி பணிப்பாளர் நாயகம் சுஹாஷினி சேனநாயக்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக செயற்பட்ட, தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் A.H.M.D.நவாஸ் மற்றும் மின்சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான M.M.C.பெர்டினாண்டோ ஆகியோர் வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாவர்.

வழக்கு தொடரப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டை ஆராய்ந்த உயர் நீதிமன்றம், வழக்கை முன்கொண்டு செல்வதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு, நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜராகிய அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தினால் நேற்று பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு இதுவரை நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைக்காத நிலையில், வழக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முடிவுக்கு வரும் பிரதம நீதியரசரின் வழக்கு! | Tamil Leader | We Lead the Nation