Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல - இரா.சாணக்கியன்!

T

The Leader Desk

மார்ச் 16, 2021 • 12:40 PM

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல - இரா.சாணக்கியன்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றிருந்தது.
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல.
  • குறித்த கூட்டத்தின்போதே சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார், தொடர்ந்தும் தெரிவிக்கையில், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் சிறு கைத்தொழில் உற்பத்திகளைச் செய்வதற்கு வளங்கள் இல்லை.
எழுத்து அளவு:

களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த கூட்டத்தின்போதே சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார், தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் சிறு கைத்தொழில் உற்பத்திகளைச் செய்வதற்கு வளங்கள் இல்லை. இது ஒரு நகரப்புறமாகையினால் IT Industry - தகவல் தொழில்நுட்பத்துறையை அமைத்து இளைஞர்களை முன்னேற்றலாம் என்பதற்காக ஒரு IT Incubation Centre இனைக் கொண்டுவருவதற்கு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை ஒன்றினைச் சமர்ப்பித்தேன்.

அதற்கு அவர் தனக்கு இதற்கு முன்னரே கடிதமொன்று வந்ததாகவும், அதற்கு காணி இல்லை என பதிலனுப்பியதாகவும் தெரிவித்தார். அதற்கு நான், IT Incubation Centre இனை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தினுள் உள்வீதிகளில் உள்ள அரச காணிகளில் அமைக்கலாம் எனக் கூறினேன்.

இதனை உடன் கவனத்திலெடுத்து சீதா அரம்பிபொலவிற்கு அனுப்புவதற்கு அபிவிருத்திக் குழு தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் சம்மதம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல. அபிவிருத்தியென மக்களிடம் தரப்படும் விடயங்கள் அனைத்தும் பரிசளிப்பதாக மக்களுக்கு வழங்கப்பட்டாலும், அவை மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்தின் மூலமே அரசாங்கம் மேற்கொள்கின்றது. இந்த வேலைத்திட்டங்களை அரசாங்கமே மேற்கொள்கின்றது என நாங்கள் நினைக்க வேண்டிய தேவை இல்லை.

இது எங்களின் உரிமை. இதை நாங்கள் கேட்டெடுக்க வேண்டும். எங்களுக்கு உரிமையும், அபிவிருத்தியும் வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது. அபிவிருத்தி என்ற பெயரில் எங்களது காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...