Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

கோத்தாபயவுக்கு நினைவூட்டல் : அவர்களை சிறையில் வைத்திருப்பது உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே!

T

The Leader Desk

அக்டோபர் 12, 2019 • 4:21 PM

கோத்தாபயவுக்கு நினைவூட்டல் : அவர்களை சிறையில் வைத்திருப்பது உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தான் ஜனாதிபதியாக தெரிவான பின்னர் சிறையில் இருக்கும் அனைத்து இராணுவ வீரர்களையும் அன்றைய தினமே விடுதலை செய்வதாகக் கூறியிருந்தார்.
  • இந்நிலையில் கோத்தாபய ராஜபக்ஷ, தான் நவம்பர் 17ம் திகதி இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கும் அனைத்து படையினரையும் விடுதலை செய்வதாக உறுதியளித்துள்ளார்.
  • மேலும் அவர்களுள் தமது கடமைகளின் போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவரும் இல்லை.
எழுத்து அளவு:

தான் ஜனாதிபதியாக தெரிவான பின்னர் சிறையில் இருக்கும் அனைத்து இராணுவ வீரர்களையும் அன்றைய தினமே விடுதலை செய்வதாகக் கூறியிருந்தார்.

இந்த இராணுவ வீரர்கள் போலியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே மொட்டுக் கட்சியின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வாதமாகும்.தடுப்புக்காவலில் இருக்கும் இந்த படைவீரர்களைப் பற்றி கோத்தாபய கூறாத விடயம் இதுதான்,

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 42 படையினருள் தற்போது ஏழு பேரே இன்னமும் விளக்கமறியலில் உள்ளதோடு, ஏனைய அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா். மேலும் அவர்களுள் தமது கடமைகளின் போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவரும் இல்லை.

தற்போது சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருப்பது ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை, ஊடகவியலாளர்களைக் கடத்திச் சென்றமை மற்றும் கப்பம் பெறுவதற்காக இளைஞர்களைக் கடத்திச் சென்றமை போன்ற குற்றச்சாட்டுக்களிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறான குற்றச் செயல்களில் தொடர்புபடுவது படைவீரர்களின் கடமை அல்ல என்பதோடு, அவை முற்றாகவே அரசியல் தேவை அல்லது உத்தரவுகளின் பிரகாரம் இடம்பெற்ற குற்றச் செயல்கள் என்து தெளிவானது.

இந்நிலையில் கோத்தாபய ராஜபக்ஷ, தான் நவம்பர் 17ம் திகதி இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கும் அனைத்து படையினரையும் விடுதலை செய்வதாக உறுதியளித்துள்ளார்.  ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களின் பிரகாரம் நீதிமன்ற செயற்பாடுகளினால் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட பின்னரே அவ்வாறானவர்களுக்கு ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்க முடியும். அவ்வாறில்லாமல் விசாரணைகள் இடம்பெற்று வரும் வழக்குகளுடன் தொடர்புடைய நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கான எந்த அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு இல்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...