Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

இ.தொ.கா சஜித்தை ஆதரிப்பதில் எமக்கு ஆட்சேபனையே இல்லை!

T

The Leader Desk

அக்டோபர் 12, 2019 • 9:18 AM

இ.தொ.கா சஜித்தை ஆதரிப்பதில் எமக்கு ஆட்சேபனையே இல்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதில் எமக்கு ஆட்­சே­பனை கிடை­யாது என்று கூட்­ட­ணியின் பிரதி தலை­வரும், மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும், விசேட பிர­தே­சங்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான கலா­நிதி.
  • அத்­தோடு 2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாமல் போன­மைக்கு காரணம் இரண்டு கட்­சி­களின் இழு­பறி நிலையே.
  • அதனை உணர்ந்து மக்கள் அணை­வரும் ஜனா­தி­பதி தேர்­த­லிலும் எதிர்­வரும் பொது தேர்­த­லிலும் வாக்­க­ளிக்க வேண்டும்.
எழுத்து அளவு:

கூட்­டணி வர­வேற்கும். அதில் எமக்கு ஆட்­சே­பனை கிடை­யாது என்று கூட்­ட­ணியின் பிரதி தலை­வரும், மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும், விசேட பிர­தே­சங்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான கலா­நிதி. வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார்.

அண்­மையில் சீரற்ற கால­நிலை கார­ண­மாக பொக­வந்­த­லாவ பகு­தியில் பாதிக்­கப்­பட்ட மக்­களை நேற்று பார்­வை­யிட்ட பின்பு ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்து அவர் கருத்த தெரி­விக்­கையில்,ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆத­ரவு தெரி­விக்­கு­மே­யானால் அதனை நாங்கள் வர­வேற்­கின்றோம். ஐக்­கிய தேசிய கட்­சியை வெற்­றி­பெற செய்ய யார் வந்து இணைந்­தாலும் தவறு இல்லை. ஆகையால் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆத­ரவு வழங்­கினால் எங்­க­ளுக்கு எந்­த­வி­த­மான ஆட்­சே­பி­னையும் இல்லை.

அத்­தோடு 2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாமல் போன­மைக்கு காரணம் இரண்டு கட்­சி­களின் இழு­பறி நிலையே.

எனவே எக் காரணம் கொண்டும் இரண்டு தேசிய கட்­சிகள் இணைந்து அர­சாங்கம் அமைப்­பது நம்­நாட்­டுக்கு பொருத்­த­மா­ன­தல்ல. இதன் கார­ண­மாக ஒரே கட்­சியில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தெரிவு செய்தால் அந்த ஆட்சி மக்­க­ளுக்கு நன்மை பயக்கும்.

அதனை உணர்ந்து மக்கள் அணை­வரும் ஜனா­தி­பதி தேர்­த­லிலும் எதிர்­வரும் பொது தேர்­த­லிலும் வாக்­க­ளிக்க வேண்டும்.

திரு­மணம் நடை­பெற்­றதன் பின்பு கண­வனும் மனை­வியும் சேர்ந்து பய­ணித்தால் தான் அந்த குடும்பம் நல்ல குடும்­ப­மாக இலக்கை நோக்­கியும் பய­ணித்து வாழ்க்­கையில் வெற்­றிப்­பெற முடியும். அப்­படி இல்­லாமல் திரு­ம­ணத்தின் பின்பு இரு­வ­ருக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் எற்­பட்டால் அந்த குடும்பம் தனது இலக்கை அடைய முடி­யாது.

சமு­தா­யத்­திலும் அவப்­பெ­யரை சந்­திக்க வேண்­டிய நிலை ஏற்­படும். அதே நிலையே இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கும் எற்­பட்­டி­ருக்­கின்­றது. ஆரம்­பத்தில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒற்­று­மை­யா­கவும் ஒத்த கருத்­து­டனும் ஒரே இலக்கை நோக்கி பய­ணித்­தார்கள். அதன் மூலம் பல வெற்­றிகள் கிடைத்­தது.

பின்பு இரு­வ­ருக்கும் இடையில் எற்­பட்ட கருத்து முரண்­பாடு அதன் மூலம் அமைச்­சர்­க­ளுக்­கி­டையே ஏற்­பட்ட கருத்து முரண்­பாடு ஒரே அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த அமைச்­சர்கள் ஒரு­வரை ஒருவர் விமர்­சிக்க ஆரம்­பித்­ததன் கார­ண­மாக நல்­லாட்சி அர­சாங்கம் தனது இலக்கை நோக்கி பய­ணிக்க முடி­யாமல் போய்­விட்­டது.

இதன் மூலம் நாங்கள் சிறந்த பாடத்தை கற்றுக்கொண்டிருக்கின்றோம். இந்த தவறை எதிர்காலத்தில் நாம் செய்ய முடியாது. மக்களும் வாக்களிக்கின்ற பொழுது சிந்தித்து ஒரு கட்சிக்கு பெரும்பான்மையை பெற்றுக்கொள்கின்ற வகையில் வாக்களிப்பார்களேயானால் அது சிறப்பானதாக இருக்கும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...