Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

சஜித்துக்கு ஏன் ஆதரவு வழங்க முன்வந்தேன்? -ஹிருணிகா விளக்கம்

T

The Leader Desk

அக்டோபர் 11, 2019 • 3:20 PM

சஜித்துக்கு ஏன் ஆதரவு வழங்க முன்வந்தேன்? -ஹிருணிகா விளக்கம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
  • எல்பிட்டி தொகுதி என்பது மிகச்சரியாகக் கூறுவதென்றால் மத்திய கொழும்பு ஆசனத்தைப் போன்றதாகும்.
  • எந்தவொரு அரசாங்கத்திலும் மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே வெற்றிபெற்றிருக்கிறது.
எழுத்து அளவு:

என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

எல்பிட்டி தொகுதி என்பது மிகச்சரியாகக் கூறுவதென்றால் மத்திய கொழும்பு ஆசனத்தைப் போன்றதாகும். எந்தவொரு அரசாங்கத்திலும் மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோன்று எல்பிட்டி தொகுதியில் எதிரணியினர் தான் வெற்றி பெறுவார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியும். 

நாங்கள் அந்தத் தொகுதியில் தோல்வியடைவோம் என்பதும் அறிந்த விடயமே. எனினும் சிறியளவிலான இந்தத் தேர்தலை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தந்தை இருக்கும் இடத்திற்கே மகனையும் அனுப்பிவிடுவோம் என்று விமல்வீரவன்ச மிகவும் தவறான கருத்தொன்றைக் கூறியிருந்தார். இவ்வாறு பிறரை அச்சுறுத்தி, வன்முறைகளைப் பிரயோகித்து அரசியல் செய்வதே அவர்களுடைய பழக்கமாகும். 

ஒருவேளை கோத்தபாய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றியடைந்தால் அவருக்கு எதிராகப் பேசுகின்றவர்களின் வாயில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவார்கள். அவ்வாறானதொரு சூழ்நிலையே தற்போது இருக்கின்றது. 

இம்முறை தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றியடைந்தால் மாத்திரமே சுதந்திரக்கட்சி பாதுகாக்கப்படும். ஏனெனில் அவர் பழிவாங்கும் குணமற்றவர் என்பதால் மீண்டும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் தலைநிமிர்ந்து செயற்பட முடியும். ஆனால் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றியடைந்தால் சுதந்திரக்கட்சி என்ற பெயரை பொதுமக்கள் மறக்கவேண்டிய நிலையே ஏற்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சஜித்துக்கு ஏன் ஆதரவு வழங்க முன்வந்தேன்? -ஹிருணிகா விளக்கம் | Tamil Leader | We Lead the Nation