Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

சஜித் நாட்டின் தேசிய பாதுகாப்பை பீல்ட் மார்சலிடம் ஒப்படைத்தார்!

T

The Leader Desk

அக்டோபர் 10, 2019 • 5:58 PM

சஜித் நாட்டின் தேசிய பாதுகாப்பை பீல்ட் மார்சலிடம் ஒப்படைத்தார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் ஒப்படைப்பதாக சஜித் பிரேமதாசா இன்று (10) இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் வாக்குறுதி வழங்கினார்.
  • சஜித்தின் இந்தக் கூற்றிற்கு பொது மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பினை ஏற்றுக் கொள்வதற்கு பீல்ட் மார்சல் மக்கள் முன் வந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
  • வடக்கின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குத் தலைமைத்துவத்தை வழங்கி, நாட்டுக்காக இரத்தத்தையும் தியாகம் செய்த, நாட்டைப் பாதுகாப்பதற்காக சிறைக்கும் சென்று வந்த பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை விட இதற்குத் தகுதியான ஒருவர் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் ஒப்படைப்பதாக சஜித் பிரேமதாசா இன்று (10) இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் வாக்குறுதி வழங்கினார்.

வடக்கின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குத் தலைமைத்துவத்தை வழங்கி, நாட்டுக்காக இரத்தத்தையும் தியாகம் செய்த, நாட்டைப் பாதுகாப்பதற்காக சிறைக்கும் சென்று வந்த பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை விட இதற்குத் தகுதியான ஒருவர் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சஜித்தின் இந்தக் கூற்றிற்கு பொது மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பினை ஏற்றுக் கொள்வதற்கு பீல்ட் மார்சல் மக்கள் முன் வந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். சஜித்தின் உரையினைத் தொடர்ந்து அனைத்து முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அவருக்கு அருகில் வந்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பொன்சேகாவின் உறுதிமொழி!

சஜித்திடன் உரையின் பின்னர் மக்கள் முன் உரையாற்றிய பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, தனக்கு சஜித் பிரேமதாசாவிடமிருந்து கிடைத்த பொறுப்பை உயிர் உள்ளவரை நிறைவேற்றுவேன் எனக் கூறினார்.

இன்று படை வீரர்களைப் பற்றி பேசும் கோத்தாபய, யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தன்னை இழுத்துச் சென்று சிறையில் அடைத்ததாகவும், தனக்கு யுத்தத்தில் ஒத்துழைப்புக்களை வழங்கிய யுத்த தளபதிகள், ஜெனரல்கள், பிரிகேடியர்கள் உள்ளிட்ட 65 அதிகாரிகளை நான்காம் மாடிக்கு கொண்டு சென்று சித்திரவதை செய்ததாகவும், 10 பிரிகேடியர்கள், 10 ஜெனரல்கள் உள்ளிட்ட யுத்தத்திற்கு தலைமை தாங்கிய 35 அதிகாரிகளின் ஓய்வூதியத்தை இல்லாமலாக்கி வீட்டுக்கு அனுப்பியதாகவும், இதன் காரணமாக சில அதிகாரிகள் இருதய நோய் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...