நெருக்கடி மேலும் வலுவடைந்துள்ளதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா நாளை (09) திகதி கட்சித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உள்ளக வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
இதனடிப்படையில் நாளைய தினம் பதினைந்து பேரைக் கொண்ட அரசியல் சபை ஒன்றை நியமித்து கட்சியின் பதில் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ.ல.சு.கட்சி யாருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை மேற்கொள்வதற்காக கூடிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரத்தை அக்கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருந்த நிலையில் தற்போது கட்சியின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதியை புறக்கணித்து விட்டு மொட்டு கட்சியில் இணைவதற்கு ஆயத்தமாக இருப்பதை அறிந்து கொண்டதைத் தொடர்ந்தே ஜனாதிபதி இத்தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ.ல.சு.கட்சி தலைவர் பதவியிலிருந்து மைத்திரி விலகத் தீர்மானம்! பதில் தலைவராக மஹிந்த!
T
The Leader Desk
அக்டோபர் 8, 2019 • 5:47 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நெருக்கடி மேலும் வலுவடைந்துள்ளதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா நாளை (09) திகதி கட்சித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உள்ளக வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
- இதனடிப்படையில் நாளைய தினம் பதினைந்து பேரைக் கொண்ட அரசியல் சபை ஒன்றை நியமித்து கட்சியின் பதில் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

