Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

கோத்தாபயவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

T

The Leader Desk

அக்டோபர் 4, 2019 • 3:45 PM

கோத்தாபயவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்றுக் கொள்­வதை தடுத்து உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி, மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்யப்பட்ட 'செட்­டி­யோ­ராரி' எழுத்­தானை மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
  • எவ்வாறாயினும் தலைமை நீதிபதி யசந்த கோதாகொட , இந்த நடவடிக்கையை மிக மோசமான , நீதிமன்றை அவமதிக்கும் செயல் என வர்ணித்ததுடன், இந்த செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்த அல்லது அச் செயற்பாடுகளில் ஈடுபட்ட சட்டத்தரணிகளை சட்டம் பார்த்துக்கொள்ளும் என எச்சறித்தார்.
  • இதனைவிட நீதிமன்ற வளாகத்திலும் கோத்தாவுக்கான ஆதரவு கோஷங்கள் எழுப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான பட்டாசுகள் கொளுத்தப்பட்டும் மகிழ்ச்சி பரிமாறப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
எழுத்து அளவு:

ஏற்றுக் கொள்­வதை தடுத்து உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி,  மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்யப்பட்ட 'செட்­டி­யோ­ராரி' எழுத்­தானை  மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யசந்த கோதா­கொட தலை­மையில் நீதி­பதி  அர்ஜுன் ஒபே­சே­கர, மஹிந்த சம­ய­வர்­தன ஆகியோர் அடங்­கிய மூவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் பரிசீல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டு வந்த நிலையிலேயே இவ்வாறு நிகாரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக  மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி யசந்த கோதாகொட இன்று மாலை தீர்ப்பறிவிக்கும் போது, கோத்தாபயவின் ஆதரவாளர்கள், ஆதரவு சட்டத்தரனிகள் பலர்  கரகோஷம்  செய்தும், மகிழ்ச்சியில் சப்தமிட்டதும்  நீதிமன்றத்துக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்ற நடவடிக்கை நிறைவுபெறாத நிலையில், தீர்ப்பின் இடை நடுவே இவ்வாறு கரகோசஷம் எழுந்தமையினால் மன்றில் இருந்த பலர் அதிர்ச்சியடைந்தனர்.  

இந்த சம்பவத்தையடுத்து கோத்தாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உடனடியாகவே  பின்னோக்கி திரும்பி  அமைதி கொள்ளுமாறு கூறியதுடன், இந்த செயற்பாடுகள் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையை நீதிபதிகளிடம் வெளியிட்டார்.

எவ்வாறாயினும் தலைமை நீதிபதி யசந்த கோதாகொட , இந்த நடவடிக்கையை மிக மோசமான , நீதிமன்றை அவமதிக்கும் செயல் என வர்ணித்ததுடன், இந்த செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்த  அல்லது அச் செயற்பாடுகளில் ஈடுபட்ட சட்டத்தரணிகளை சட்டம் பார்த்துக்கொள்ளும் என எச்சறித்தார்.

இதனைவிட நீதிமன்ற வளாகத்திலும் கோத்தாவுக்கான ஆதரவு கோஷங்கள் எழுப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான பட்டாசுகள் கொளுத்தப்பட்டும் மகிழ்ச்சி பரிமாறப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கோத்தாபயவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு | Tamil Leader | We Lead the Nation