உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பாதகமான தீர்ப்பை வழங்கினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆயத்தமாக இருக்குமாறு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிர்கட்சியின் மூத்த தலைவரான திணேஸ் குணவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நீதிமன்றத்தினால் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால் அதற்கு மாற்றுவழியாக ராஜபக்ஷ குடும்பத்தின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக வார இறுதி செய்திப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாமரை மொட்டு கட்சியின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்காக தற்போது கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளதோடு, அவரால் போட்டியிடுவதற்கு ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் மாற்று வேட்பாளராக தினேஸ் குணவர்தன அல்லது சமல் ராஜபக்ஷ ஆகியோருள் ஒருவர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகையால் அவ்வாறு அவர்கள் சுயோட்சையாகப் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.
கோத்தாபயவுக்கு முடியாது போனால் மாற்று வேட்பாளர் திணேஸ் : சமலும் ஆயத்தமாக!
T
The Leader Desk
அக்டோபர் 4, 2019 • 5:42 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இவர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகையால் அவ்வாறு அவர்கள் சுயோட்சையாகப் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

