Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ரவூப் ஹக்கீம் ஆதரவளிக்க முன்வந்திருப்பதை பெரிதும் மதிக்கிறேன்: அமைச்சர் சஜித் பிரேமதாச

T

The Leader Desk

அக்டோபர் 2, 2019 • 4:17 PM

  ரவூப் ஹக்கீம் ஆதரவளிக்க முன்வந்திருப்பதை பெரிதும் மதிக்கிறேன்: அமைச்சர் சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.
  • கல்முனை விவகாரம் குறித்தும், பொதுவாக நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதிநிதிகளாலும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
  • ஆனால், அளுத்கம, அம்பாறை மற்றும் திகன முதலான சம்பவங்கள் ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுக்கு வழிகோலியுள்ளதாக நம்பப்படுகின்றது.
எழுத்து அளவு:

ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒத்துழைப்பு வழங்கியதுபோல, தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (02) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட சந்தித்து ஒன்றரை மணி நேரமாக கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது படையினர் நிலைகொண்டுள்ள மற்றும் வனபரிபால திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வட, கிழக்கு முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும், வெளியேற்றப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் வட மாகாண முஸ்லிம்களின் நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

புத்தளத்தில் உக்கிரமடைந்துள்ள அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இங்கு எடுத்துரைக்கப்பட்டதுடன், முஸ்லிம்களுடைய பாதுகாப்பை உரியமுறையில் உத்தரவாதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் குடியிருப்பு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது. கல்முனை விவகாரம் குறித்தும், பொதுவாக நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதிநிதிகளாலும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

இவற்றுக்கு பதிலளிக்கும்போது ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியதாவது;

அரசியல் மற்றும் பூகோள ரீதியில் நெருக்கடிகளுக்குள்ளாகியிருக்கும் இலங்கையை உன்னத நிலைக்கு கொண்டுவருதில் நான் கூடுதல் கவனம் செலுத்துவேன். நாட்டுப் பிரஜைகளான பௌத்தர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும் எனது நம்பகத்தன்மை பற்றி கிஞ்சித்தும் சந்தேகிக்கவோ அதுபற்றி இருமுறை சிந்திக்கவோ தேவையில்லை.

தீவிரவாதத்தை நான் ஆதரிப்பவனல்ல. ஆனால், அளுத்கம, அம்பாறை மற்றும் திகன முதலான சம்பவங்கள் ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுக்கு வழிகோலியுள்ளதாக நம்பப்படுகின்றது.

மேலும், குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னணியின் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த தீய சக்திகள் செயற்பட்டுள்ளன.

உண்மையான, நேர்மையான பௌத்தராக எனது தந்தை என்னை வளர்த்ததால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் சேவையாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளேன் என்றார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...