Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

மனுவினால் பிரச்சினைகள் இல்லை - கோத்தாவின் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்

T

The Leader Desk

அக்டோபர் 1, 2019 • 5:44 PM

மனுவினால் பிரச்சினைகள் இல்லை - கோத்தாவின் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த மனுவுடன் தொடர்புடைய வழக்கு தொடர்பில் கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்களோடு நேற்று (30) இரவு மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே சட்டத்தரணிகள் இவ்வாறு கோரியுள்ளனர்.
  • பிழைகள் இருப்பின் அது நடைமுறைச் செயற்பாடுகளில் இடம்பெற்றவையாக இருக்க கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதன் போது கூறியுள்ளார்.
  • இதன் போது குறித்த வழக்கு தொடர்பிலான கலந்துரையாடலை பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவே ஆரம்பித்து வைத்துள்ளார்.
எழுத்து அளவு:

பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எவ்வித சட்ட அடிப்படையும் அற்றது என்றும், எனவே வழக்குத் தீர்ப்பு தொடர்பில் எந்த அச்சத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் கோத்தாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் மொட்டுக் கட்சியினதும், கூட்டு எதிர்கட்சியினதும் தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த மனுவுடன் தொடர்புடைய வழக்கு தொடர்பில் கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்களோடு நேற்று (30) இரவு மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே சட்டத்தரணிகள் இவ்வாறு கோரியுள்ளனர்.

இதன் போது குறித்த வழக்கு தொடர்பிலான கலந்துரையாடலை பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவே ஆரம்பித்து வைத்துள்ளார்.

இலங்கையில் பிறந்த கோத்தாபய ராஜபக்ஷவுக்கு இலங்கையின் பிரஜா உரிமை தொடர்பில் எவ்விதப் பிரச்சினைகளும் இருக்க முடியாது என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது கூறியுள்ளார்.  பிழைகள்  இருப்பின் அது நடைமுறைச் செயற்பாடுகளில் இடம்பெற்றவையாக இருக்க கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதன் போது கூறியுள்ளார். அவ்வாறாயின் அது தொடர்பில் அதிகாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தான் தற்போது இந்த வழக்கு தொடர்பில் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அதன் பிரகாரம் சரியான நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே நேற்று (30) இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் தொடர்பில் பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து தெரிவிக்கும் போது, குறித்த வழக்கு எவ்வித சட்டரீதியான அடிப்படைகளும் அற்ற வெறும் கழங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொடரப்பட்ட வழக்கு என அறிந்து கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...