Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

மிகத் தகுதியானவர் சஜித்தே” என்கிறார் சீ.வி. விக்னேஸ்வரன்

T

The Leader Desk

அக்டோபர் 1, 2019 • 5:33 PM

மிகத் தகுதியானவர் சஜித்தே” என்கிறார் சீ.வி. விக்னேஸ்வரன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மிகச் சரியானவர் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.
  • குறைபாடுகள் பல இருந்தாலும் சஜித் பிரேமதாச இந்நாட்டின் ஜனாதிபதியாவது தொடர்பில் தனக்கு தனிப்பட்ட ரீதியில் மிகுந்த மகிழ்ச்சியே என ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
  • விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

மிகச் சரியானவர் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  குறைபாடுகள் பல இருந்தாலும் சஜித் பிரேமதாச இந்நாட்டின் ஜனாதிபதியாவது தொடர்பில் தனக்கு தனிப்பட்ட ரீதியில் மிகுந்த மகிழ்ச்சியே  என ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

சஜித் பிரேமதாசவின் கல்வி அறிவு, தனது தந்தையிடமிருந்து பெற்ற அரசியல் அனுபவ பயிற்சிகள் போன்றவற்றினால் அவருக்கு சிறந்த ஆட்சியைக் கொண்டு செல்வதற்கு தகுதி உள்ளது என தான் நம்புவதாகவும் விக்னேஸ்வரன் இதன் போது கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாச தமிழ் மக்களின் எதிரி என இதுவரை காண முடியாததால் தான் அது தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த அவர், இந்நாட்டில் 75 வீதமானோர்  சிங்கள பௌத்த மக்கள் என்பதோடு வடக்கு கிழக்கு மக்களில் 85 வீதமானவர்கள் தமிழ் மக்கள் என்பதை சஜித் பிரேதாச புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச சரியான, காலத்திற்கு ஏற்ற தீா்மானத்தை மேற்கொண்டு செயற்பட்டால் வடக்கு கிழக்கு அனைத்து தமிழ் மக்களினதும் அவரால் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மிகத் தகுதியானவர் சஜித்தே” என்கிறார் சீ.வி. விக்னேஸ்வரன் | Tamil Leader | We Lead the Nation