Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

கோத்தாபய இலங்கை பிரஜையா என்ற சந்தேகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு!

T

The Leader Desk

செப்டம்பர் 29, 2019 • 5:27 PM

கோத்தாபய இலங்கை பிரஜையா என்ற சந்தேகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • , அதனை கோத்தாபய ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகளிடம் வழங்கியிருப்பதாக அறியக் கிடைத்துள்ளது.
  • இந்த மனு பிரதிவாதிகளுக்கு நொத்தீசு விநியோகிப்பதற்காக நாளை திங்கட்கிழமை திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எழுத்துக் கொள்ளுமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • கோத்தாபயவின் ஆவணங்கள் “மிஸ்ஸிங்க்”!
எழுத்து அளவு:

, அதனை கோத்தாபய ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகளிடம் வழங்கியிருப்பதாக அறியக் கிடைத்துள்ளது.

இந்த மனு பிரதிவாதிகளுக்கு நொத்தீசு விநியோகிப்பதற்காக நாளை திங்கட்கிழமை திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எழுத்துக் கொள்ளுமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தாபயவின் ஆவணங்கள் “மிஸ்ஸிங்க்”!

குறித்த மனுதாரர்களினால் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ஷவின் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் குற்றப்  புலனாய்வுத் திணைக்களத்தினால்  தாக்கல் செய்யப்பட்ட பீ அறிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்த போது இணைக்கப்பட்டுள்ளதோடு, அந்த பீ அறிக்கையின் மூலம் வெளிவரும் விடயங்களுக்கு அமைவாக கோத்தாபய ராஜபக்ஷவுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்குவதற்குரிய கோவைகள் பாதுகாப்பு அமைச்சிடமோ அல்லது குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திடமோ இல்லை என்றும், அதே போன்று கோத்தாபயவின் குடியுரிமை தொடர்பான அறிக்கைகள் திருடப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகவும் மனுதாரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அதே போன்று குடியுரிமைச் சட்டத்தின் 19ம் பிரிவுக்கு அமைய கோத்தாபய ராஜபக்ஷ இரட்டைப் பிரஜாவுரிமைக்காக உரிய விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்கவில்லை என்றும், எனவே அவரிடம் இருப்பதாகக் கூறப்படும் இரட்டைப் பிரஜாவுரிமைச் சான்றிதழ் மோசடியானது அல்லது இரத்துச் செய்யப்பட்டது அல்லது செல்லுபடியற்றதாகையால் அந்தச் சான்றிதழில் சட்டரீதியான செல்லுபடித்தன்மையற்றது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கோத்தாபய ராஜபக்ஷவுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தமக்குத் தெரிய வந்துள்ளதாகவும், கோத்தாபய ராஜபக்ஷ சட்டரீதியான இலங்கைப் பிரஜை இல்லாவிட்டால் அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் நாட்டு மக்களுக்கு, தேசிய பாதுகாப்பிற்கு, இறையாண்மைக்கு, பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மீளத் திருப்பமுடியாத கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் மனுதாரர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...