Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

கோத்தாபய பெற்றுக் கொண்ட தடையின் போது ஊடகவியலாளர்களுக்கு அழுத்தங்கள்!

T

The Leader Desk

செப்டம்பர் 28, 2019 • 3:57 PM

கோத்தாபய பெற்றுக் கொண்ட தடையின் போது ஊடகவியலாளர்களுக்கு அழுத்தங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கான முக்கிய காரணமாகத் தெரிய வந்திருக்கும் விடயம், செப்தெம்பர் 27ம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதற்காக கோத்தாபயவின் சட்டத்தரணி ரொமேஷ் சில்வா, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள விடயங்களாகும்.
  • இதற்கு முன்னரும் தாம் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பான வழக்குகளில் தீர்ப்புக்களை வழங்கியுள்ளதால் இந்த மனுவை விசாரணை செய்வதற்கு தான் விரும்பவில்லை என நீதிபதி வென்ஹப்புலி திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு வழக்கிலிருந்து விலகிச் சென்றுள்ளார்.
  • அதன் பின்னர் தீபாலி விஜேசுந்தர தனியாகவே யாழ் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட சிதாசியை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளதோடு இந்த மனு மீதான விசாரணையினை ஒக்டோபர் 03ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
எழுத்து அளவு:

சாட்சியமளிப்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்டிருந்த

கட்டளையை செயற்படுத்துவதைத் தடை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் 24ம் திகதி இடைக்கால தடையுத்தரவை வழங்கிய செய்தி பிரதான ஊடகங்களில் வெளியாவதைத் தடுப்பதற்கு சில சட்டத்தரணிகள் குழு கடும் முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான முக்கிய காரணமாகத் தெரிய வந்திருக்கும் விடயம், செப்தெம்பர் 27ம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதற்காக கோத்தாபயவின் சட்டத்தரணி ரொமேஷ் சில்வா, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள விடயங்களாகும்.

தற்போதை பாதுகாப்பு நிலைகளின் அடிப்படையில் கோத்தாபய ராஜபக்ஷ யாழ் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார். நீதிமன்ற ஊடகவியாலளர்களின் கூற்றுக்கு அமைய இதன் மூலம் தெரிவிக்கப்படும் விடயம், யாழ் நீதிமன்றத்தைத் தவிற வேறு நீதிமன்றங்களில் ஆஜராக முடியும் என்பதேயாகும்.

இவரது மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அச்சல வென்ஹப்புலி மற்றும் தீபாலி விஜேசுந்தர ஆகியோா் ஆராய்ந்தனர். இதற்கு முன்னரும் தாம் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பான வழக்குகளில் தீர்ப்புக்களை வழங்கியுள்ளதால் இந்த மனுவை விசாரணை செய்வதற்கு தான் விரும்பவில்லை என நீதிபதி வென்ஹப்புலி திறந்த நீதிமன்றத்தில்  தெரிவித்துவிட்டு வழக்கிலிருந்து விலகிச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் தீபாலி விஜேசுந்தர தனியாகவே யாழ் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட சிதாசியை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளதோடு இந்த மனு மீதான விசாரணையினை ஒக்டோபர் 03ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த மனு விசாரணையினை அறிக்கையிடுவதற்காகச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு சில சட்டத்தரணிகள் குழு, பாதுகாப்பு போதாமை காரணமாக யாழ்ப்பானம் செல்லவில்லை என்ற விடயம் அடங்கியவாறு செய்திகளை எழுத வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.  எனினும் ஊடகவியலாளர்கள் செய்தியை உரியவாறு தமது நிறுவனங்களுக்கு அனுப்பிய போதிலும் அனேக பிரதான ஊடகங்களும், இலத்திரணியல் ஊடகங்களும் இந்தச் செய்தியை உரிய முறையில் வெளியிடவில்லை.

(ராவய)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கோத்தாபய பெற்றுக் கொண்ட தடையின் போது ஊடகவியலாளர்களுக்கு அழுத்தங்கள்! | Tamil Leader | We Lead the Nation