Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

தில்ருக்ஷியின் விசாரணைக்கு ஆணைக்குழுவிலிருந்து ஐந்து பெயர்கள்!

T

The Leader Desk

செப்டம்பர் 28, 2019 • 3:53 PM

தில்ருக்ஷியின் விசாரணைக்கு ஆணைக்குழுவிலிருந்து ஐந்து பெயர்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • டயஸ் விக்ரமசிங்க தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபர் விரும்பு விசாரணை அதிகாரி ஒருவரோ அல்லது சிலரையோ தெரிவு செய்யுமாறு ஐவரின் பெயர்களை அனுப்பியுள்ளதாக அரச சேவை ஆணைக்குழுவின் தலைவர் தர்மசேன திசாநாயக்கா “ராவய” பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
  • இதனடிப்படையில் சட்டமா அதிபரினால் தில்ருக்ஷி தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக அரச சேவை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டதற்கு அமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் அவரது சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
எழுத்து அளவு:

டயஸ் விக்ரமசிங்க தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபர் விரும்பு விசாரணை அதிகாரி ஒருவரோ அல்லது சிலரையோ தெரிவு செய்யுமாறு ஐவரின் பெயர்களை அனுப்பியுள்ளதாக அரச சேவை ஆணைக்குழுவின் தலைவர் தர்மசேன திசாநாயக்கா “ராவய” பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

சொலிஸிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க அவண்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் குரல் பதிவு சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க அது தன்னுடைய குரல் பதிவே என சட்டமா அதிபரின் முன்னிலையில் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதனடிப்படையில் சட்டமா அதிபரினால் தில்ருக்ஷி தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக அரச சேவை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டதற்கு அமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் அவரது சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையினை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபருக்கு தமது ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளுள் ஐவரின் பெயர்களை சிபார்சு செய்து அனுப்புவதற்கும், தேவையான அதிகாரி அல்லது அதிகாரிகளைத் தெரிவு செய்து கொள்வதற்கான பொறுப்பு சட்டமா அதிபருக்கு வழங்குவதற்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பான கடிதத்தை சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...