Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ராஜபக்ஷக்கள் எதிர்பார்க்காத வியடம் : சஜித் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரானார்!

T

The Leader Desk

செப்டம்பர் 26, 2019 • 5:54 PM

ராஜபக்ஷக்கள் எதிர்பார்க்காத வியடம் : சஜித் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரானார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று கட்சி தலைமையகமான சிரிகொத்தாவில் இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2005ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
  • மற்றும் 2015ம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பொது வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கியது.
எழுத்து அளவு:
இன்று கட்சி தலைமையகமான சிரிகொத்தாவில் இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினால் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயரை பிரேரித்ததைத் தொடர்ந்து அதற்கு செயற்குழுவின் அங்கீகாரம் கிடைத்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான ஹரீன் பொ்னாண்டோ பீபீசி சிங்கள சேவைக்குத் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2005ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 2010 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பொது வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கியது.

தற்போதைய அரசின் வீடமைப்பு நிர்மாணத் துறை மற்றும் கலாசார அமைச்சரான சஜித் பிரேமதாச இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...