கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் நியமனத்தை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியிருப்பது நிபந்தனைகளுடனேயே என ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் theleader.lk இணையம் அமைச்சா் சஜித்திடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியதாவது,
“அவ்வாறான நிபந்தனைகள் தொடர்பில் இதுவரை எனக்கு அறிவிக்கப்படவில்லை. எனினும் ஒரு விடயத்தைப் பற்றித் தெளிவாகக் கூற வேண்டும். நான் எதற்காகவும் நாட்டின் சுயகௌரவத்தையும், கட்சியினதோ அல்லது முன்னணியினதோ சுய கௌரவம், அதே போன்று எனது சுய கௌரவத்தை அடகு வைத்துவிட்டு அதன் மூலம் இலாபம் பெறுபவனல்ல. கடந்த காலங்களில் அவ்வாறானவர்கள் இருந்திருக்கலாம். எனினும் இந்த சஜித் பிரேமதாச அவ்வாறான ஒருவனல்ல.
எந்த நிபந்தனைகளுக்கு அடிபணிந்து இழிவான வேலை செய்யப் போவதில்லை. எனவே நிபந்தனைக்கு அடிபணிந்து வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு சஜித் பிரேமதாச ஆயத்தமாக இல்லை” எனக் கூறினார்.
நிபந்தனைகளுக்கு அடிபணிந்து வேட்பாளர் நியமனத்தைப் பெறப் போவதில்லை - சஜித்
T
The Leader Desk
செப்டம்பர் 25, 2019 • 5:17 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
- நான் எதற்காகவும் நாட்டின் சுயகௌரவத்தையும், கட்சியினதோ அல்லது முன்னணியினதோ சுய கௌரவம், அதே போன்று எனது சுய கௌரவத்தை அடகு வைத்துவிட்டு அதன் மூலம் இலாபம் பெறுபவனல்ல.
- அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் நியமனத்தை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியிருப்பது நிபந்தனைகளுடனேயே என ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் theleader.lk இணையம் அமைச்சா் சஜித்திடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

