Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு ரணில் இணக்கம் : நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் இதோ!

T

The Leader Desk

செப்டம்பர் 25, 2019 • 5:13 PM

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு ரணில் இணக்கம் : நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் இதோ!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இணக்கத்தைத் தெரிவித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
  • நேற்று (24) இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்களின் சந்திப்பின் போதே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, கபீர் ஹசீம், ரவி கருணாநாயக்கா, நவீன் திசாநாயக்கா, ரஞ்சித் மத்துமபண்டார, மலிக் சமரவிக்ரம போன்றோரும் கலந்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

இணக்கத்தைத் தெரிவித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நேற்று (24) இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்களின் சந்திப்பின் போதே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, கபீர் ஹசீம், ரவி கருணாநாயக்கா, நவீன் திசாநாயக்கா, ரஞ்சித் மத்துமபண்டார, மலிக் சமரவிக்ரம போன்றோரும் கலந்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைமைத்துவம் மற்றும் பிரதமர் பதவி ரணிலுக்கே!

எவ்வாறாயினும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை வழங்கும் போது சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை ஒழிப்பது உள்ளிட்ட கட்சியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள கொள்கைத் திட்டங்களை ஐ.தே.முன்னணியின் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையின் மூலம் நடைமுறைப்படுத்தல், கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், உப தலைவர் போன்ற கட்சியின் பதவிகளை வகிப்போரை மாற்றாமலிருத்தல், ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் பிரதமர் பதவியில் நீடித்தல் போன்ற நிபந்தனைகள் சில இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...