Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

“லீடர்” செய்தி முற்றிலும் சரியே! கோத்தாபய லலித் - குகன் வழக்கில் ஆஜராக மாட்டார்!

T

The Leader Desk

செப்டம்பர் 25, 2019 • 5:07 PM

“லீடர்” செய்தி முற்றிலும் சரியே! கோத்தாபய லலித் - குகன் வழக்கில் ஆஜராக மாட்டார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் “லலித் - குகன் காணாமல் போன சம்பவம் : கோத்தாபய இம்முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பாரா?” என்ற தலைப்பில் theleader.lk செப்தெம்பர் 20ம் திகதி வெளிப்படுத்திய விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
  • லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் 2011ம் ஆண்டிலிருந்து காணாமல் போயுள்ளதோடு, இது தொடர்பில் அவர்களைத் தேடித் தருமாறு அவர்களது குடும்பத்தினரால் ஹபெயாஸ் கோபூஸ் முறைப்பாட்டை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்துள்ளனர்.
  • இச்சம்பவம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக இம்மாதம் 27ம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தனக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புக் காரணங்களினால் யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகுவது சிரமமானது என்றும் கோத்தாபய ராஜபக்ஷ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஹபேயாஸ் கோபூஸ் முறைப்பாட்டிற்கு சாட்சியமளிப்பதற்கு தாமரை மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷ இம்மாதம் 27ம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என விடுக்கப்பட்ட உத்தரவினை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (24) தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் “லலித் - குகன் காணாமல் போன சம்பவம் : கோத்தாபய இம்முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பாரா?” என்ற தலைப்பில் theleader.lk செப்தெம்பர் 20ம் திகதி வெளிப்படுத்திய விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டினைக் கவனத்தில் எடுத்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி திருமதி தீபாலி விஜேசுந்தர இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.  எவ்வாறாயினும் அச்சல வெங்கப்புலி இந்த முறைப்பாட்டு விசாரணைகளிலிருந்து விலகி இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் 2011ம் ஆண்டிலிருந்து காணாமல் போயுள்ளதோடு, இது தொடர்பில் அவர்களைத் தேடித் தருமாறு அவர்களது குடும்பத்தினரால் ஹபெயாஸ் கோபூஸ் முறைப்பாட்டை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக  இம்மாதம் 27ம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தனக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புக் காரணங்களினால் யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகுவது சிரமமானது என்றும் கோத்தாபய ராஜபக்ஷ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு வெளிப் பிரதேசங்களின் நீதிமன்றங்களில் சாட்சியமளிப்பதற்கு தான் தயார் என்றும் கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

“லீடர்” செய்தி முற்றிலும் சரியே! கோத்தாபய லலித் - குகன் வழக்கில் ஆஜராக மாட்டார்! | Tamil Leader | We Lead the Nation