Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

விமல், கம்மன்பில ஆகியோரைப் பொருட்படுத்தாமல் பெசிலினால் இரண்டு டம்மி வேட்பாளர்கள்!

T

The Leader Desk

செப்டம்பர் 24, 2019 • 4:32 PM

விமல், கம்மன்பில ஆகியோரைப் பொருட்படுத்தாமல் பெசிலினால் இரண்டு டம்மி வேட்பாளர்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன் போது அவர் அவரது நெருங்கிய தோழர்களான சிரிபால அமரசிங்க மற்றும் ஜயந்த கெட்டகொட ஆகிய இருவரை டம்மி வேட்பாளர்களாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
  • தற்போது அவர்கள் இருவரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்குவதற்காக தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளனர்.
  • சிரிபால அமரசிங்க என்பவர் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதோடு, ஜயந்த கெட்டகொட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சரத் பொன்சேகாவின் கட்சிகளைப் பிரதிநித்துவப் படுத்தி பாராளுமன்ற உறுப்பினரா இருந்தவராவார்.
எழுத்து அளவு:

புதிய கூட்டணி ஒன்றை அமைக்குமாறு விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்ற கட்சித் தலைவர் தொடர்ந்தும் விடுத்த கோரிக்கைகளை முற்றாகப் புறந்தள்ளிவிட்டு தாமரை மொட்டு கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தற்போது அவரது பரந்தளவிலான அமைப்புக்களின் ஊடாக ஜனாதிபதித் தேர்தல் பிரசார பணிகளை ஆரம்பித்துள்ளார்.

இதன் போது அவர் அவரது நெருங்கிய தோழர்களான சிரிபால அமரசிங்க மற்றும் ஜயந்த கெட்டகொட ஆகிய இருவரை டம்மி வேட்பாளர்களாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சிரிபால அமரசிங்க என்பவர் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதோடு, ஜயந்த கெட்டகொட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சரத் பொன்சேகாவின் கட்சிகளைப் பிரதிநித்துவப் படுத்தி பாராளுமன்ற உறுப்பினரா இருந்தவராவார். தற்போது அவர்கள் இருவரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்குவதற்காக தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண (தாமரை மொட்டு), ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் கூட்டணி அமைத்ததன் பின்னர் கோத்தாபய ராஜபக்ஷ அக்கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக தாமரை மொட்டுச் சின்னத்தில் நியமிப்பதற்கு கடந்த 11ம் திகதி பெசில் ராஜபக்ஷவினால்  எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஊடாக விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்திருந்த போதிலும் கடந்த 20ம் திகதி கோத்தாபயவுக்காக கட்டுப்பணம் செலுத்தியிருப்பது கூட்டணி அமைக்கும் கதையினை எந்த வகையில் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

விமல், கம்மன்பில ஆகியோரைப் பொருட்படுத்தாமல் பெசிலினால் இரண்டு டம்மி வேட்பாளர்கள்! | Tamil Leader | We Lead the Nation