Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

முஸ்லிம் சமூகமே சஹ்ரான்களே” எனக் கூறிய கோத்தாபயவின் பேச்சாளர் மன்னிப்புக் கோர வேண்டும் - நலின் பண்டார

T

The Leader Desk

செப்டம்பர் 24, 2019 • 4:28 PM

முஸ்லிம் சமூகமே சஹ்ரான்களே” எனக் கூறிய கோத்தாபயவின் பேச்சாளர் மன்னிப்புக் கோர வேண்டும் - நலின் பண்டார

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சமூகத்திடம் மாத்திரமின்றி முழு நாட்டிடத்திலும் மன்னிப்புக் கோர வேண்டும் என பிரதி அமைச்சர் நலின் பண்டார கூறினார்.
  • நேற்று (23) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
  • அவர் அடுத்த நாள் வந்து நான் சஹ்ரான் எனக் கூறியது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையேயாகும் எனக் கூறினார்.
எழுத்து அளவு:

சமூகத்திடம் மாத்திரமின்றி முழு நாட்டிடத்திலும் மன்னிப்புக் கோர வேண்டும் என பிரதி அமைச்சர் நலின் பண்டார கூறினார்.  நேற்று (23) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நலின் பண்டார மேலும் கூறியதாவது,

“பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அன்று சஹ்ரானுக்கு, பொட்டு அம்மானுக்கு பணம் கொடுத்ததை ஏற்றுக் கொண்டது மாத்திரமல்ல அதனைத் திரும்பத் திரும்ப கூறினார். இதனை உங்களால் அந்த வீடியோவில் பார்த்துக் கொள்ள முடியும்.

அதனை விடவும் ஆபத்தான கருத்தினை அதற்கு மறுநாள் ஏற்பாடு செய்யப்பட்ட அவர்களது ஊடக சந்திப்பின் போது அவர் கூறினார். அவர் கூறிய விடயங்களுக்காக அன்று மாலை சென்ற பின்னர் கோத்தாபய ராஜபக்ஷ அவரை முழந்தாளிடச் செய்து தண்டனை வழங்கினாரா என எனக்குத் தெரியாது”

முஸ்லிம் சமூகத்தையே உளவாளிகளாகப் பாவித்தார்களாம்!

இதனை சரிசெய்யச் சென்று அதனை விடவும் ஆபத்தான கதையினைக் கூறினார். அவர் அடுத்த நாள் வந்து நான் சஹ்ரான் எனக் கூறியது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையேயாகும் எனக் கூறினார்.  ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தைத்தானாம் அவர் சஹ்ரான்கள் எனக் கூறியது. முழு முஸ்லிம் சமூகத்தையும் உளவாளிகளாகப் பாவித்தார்களாம். அதனைவிடவும் மோசமான விடயம் இது. சஹ்ரான் என்பவன் கொடுரமான ஒரு பயங்கரவாதியாகும். அந்த தீவிரவாதியின் பெயரில் முஸ்லிம் சமூகத்தை அடையாளப்படுத்தியது எமது நாட்டில் இருக்கும் முழு முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்துள்ளதாகவே நான் கருதுகின்றேன்.  இந்தக் கூற்றைக் கூறியது ஒரு சாதாரணமானவர் அல்ல. அவர் தாமரை மொட்டுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முஸ்லிம் சமூகமே சஹ்ரான்களே” எனக் கூறிய கோத்தாபயவின் பேச்சாளர் மன்னிப்புக் கோர வேண்டும் - நலின் பண்டார | Tamil Leader | We Lead the Nation