ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்ளக் கூடிய வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவை ஏற்றுக் கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் விடுத்துள்ள யோசனையினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க முதற்தடவையாக கவனத்தைச் செலுத்தியுள்ளதாக ராவய பத்திரிகை இன்று (22) செய்தி வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் அடுத்த வாரத்தில் செயற்குழுவைக் கூட்டி வாக்கெடுப்புக்குச் செல்லாது இந்த வேட்பாளர் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கு பிரதமர் நடவடிக்கை மேற்கொள்வார் என ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் சார்பு அமைச்சர் ஒருவர் ராவயவுக்குத் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பை ஏற்று பிரதமரும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இன்று காலை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேசிய சந்தர்ப்பத்தில் இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி பிளவு படுவதைத் தடுக்குமாறு ரணிலுக்கு அழுத்தம்!
T
The Leader Desk
செப்டம்பர் 23, 2019 • 5:16 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இதனடிப்படையில் அடுத்த வாரத்தில் செயற்குழுவைக் கூட்டி வாக்கெடுப்புக்குச் செல்லாது இந்த வேட்பாளர் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கு பிரதமர் நடவடிக்கை மேற்கொள்வார் என ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் சார்பு அமைச்சர் ஒருவர் ராவயவுக்குத் தெரிவித்துள்ளார்.
- சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பை ஏற்று பிரதமரும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இன்று காலை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேசிய சந்தர்ப்பத்தில் இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

