Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ஆம், நாம்தான் ஸஹரான்களுக்கு பணம் வழங்கினோம்! கெஹெலிய ரம்புக்வெல

T

The Leader Desk

செப்டம்பர் 23, 2019 • 5:11 PM

ஆம், நாம்தான் ஸஹரான்களுக்கு பணம் வழங்கினோம்!  கெஹெலிய ரம்புக்வெல

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நம்பப்படும் முஹம்மர் ஸஹ்ரான் ஹசீம் ஒரு உளவாளியாக அரசாங்கத்திடமிருந்து சம்பளம் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.
  • சாதாரணமாக உளவாளிகளாகக் கருதப்படுவது தீவிரவாத குழுக்களுக்கு வெளியிலிருந்து அனுப்பப்பட்டு தகவல்களைப் பெற்றுத் தருபவர்களேயாகும்.
  • முன்னாள் அமைச்சர் மிகவும் ஆவேசமான முறையில் இதனைத் தெரிவித்தது, அத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணைந்திருந்த பிரதி அமைச்சர் நலின் பண்டாரவுடன் ஏற்பட்ட சூடான வாக்குவாதத்தின் போதாகும்.
எழுத்து அளவு:

நம்பப்படும் முஹம்மர் ஸஹ்ரான் ஹசீம் ஒரு உளவாளியாக அரசாங்கத்திடமிருந்து சம்பளம் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் முஹம்மது ஸஹ்ரான் ஹசீம்  உள்ளிட்ட குழுவினருக்கு நிதிப் பங்களிப்புச் செய்தது எமது அரசாங்கமே என ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்த கெஹெலிய ரம்புக்வெல “ஹிரு” தொலைக்காட்சியின் பலய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மிகவும் ஆவேசமான முறையில் இதனைத் தெரிவித்தது, அத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணைந்திருந்த பிரதி அமைச்சர் நலின் பண்டாரவுடன் ஏற்பட்ட சூடான வாக்குவாதத்தின் போதாகும்.

அரசாங்கம் சம்பளம் வழங்கியது உளவாளிக்கே என்றும், அவர்களது பெயர் விபரங்களை வெளியிடுவது கடும் குற்றமாகும் என இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். எவ்வாறிருந்த போதிலும் கடந்த ஜூன் 4ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் கேள்விக்கு பதிலளித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல  பாராளுமன்றத்தில் கூறும்போது, ஸஹ்ரான் ஹசீம் உள்ளிட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் முப்பது பேருக்கு கடந்த அரசாங்த்தினால் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.



சாதாரணமாக உளவாளிகளாகக் கருதப்படுவது தீவிரவாத குழுக்களுக்கு வெளியிலிருந்து அனுப்பப்பட்டு தகவல்களைப் பெற்றுத் தருபவர்களேயாகும். சில சமயங்களில் அவ்வாறான அமைப்புக்களில் உள்ளவர்களுக்கே பணம் வழங்கப்பட்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் இடம்பெறும். எனினும் தற்கொலை தாக்குதல் அமைப்பின் தலைவர் ஒருவரை உளவாளியாகக் கருத்தி சம்பளம் வழங்கியிருப்பது பாரதூரமான நிலையாகும்.

இவ்வாறான நிலையினுள் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் பிரதி அமைச்சர் நலின் பண்டார ஆகியோர் ஹிரு தொலைக்காட்சியின் பலய நிகழ்ச்சியில் ஸஹ்ரான் தொடர்பில் கருத்துக்களைத் தெரிவித்த பகுதி எவ்வித திருத்தங்களுமின்றி கீழே தரப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...