Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

தில்ருக்ஷியின் குரல் பதிவு : கோத்தாபயவுக்கு வாக்காளத்து வாங்கும் அந்த அமைச்சர் யார்?

T

The Leader Desk

செப்டம்பர் 22, 2019 • 5:02 PM

தில்ருக்ஷியின் குரல் பதிவு : கோத்தாபயவுக்கு வாக்காளத்து வாங்கும் அந்த அமைச்சர் யார்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சட்டமா அதிபா் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனராகப் பணியாற்றும் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களினுள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
  • இந்நிலையினுள் நேற்று (21) சமூக வலைத்தளத்தின் ஊடாக நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ள தில்ருக்ஷி விக்ரமசிங்க, “உங்களோடு மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை எனக்கு ஏற்படுத்தியது எந்த அமைச்சர், என்ன காரணத்திற்கு என்ற விடயங்களை மக்களுக்கு கூறுங்கள்” என அறிவித்துள்ளார்.
  • இது பிரதமரின் தரப்பினரால் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பிரசார ஊக்குவிப்பே என அவ்வாறான சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எழுத்து அளவு:

அரசியல்வாதிகளினால் அழுத்தங்கள் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் குரல் பதிவு  தொடர்பில் தற்போது அரசியல் களத்தில் கடும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளதோடு, அது தாமரை மொட்டு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்குச் சாதகமாக அவரது பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ், அரசியல் அழுத்தங்களின் காரணமாக அவண்காட் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஊடாக கோத்தாபய ராஜபக்ஷவை இலக்காகக் கொண்டு அரசாங்கம் முன்னெடுத்து வந்த அரசியல் வழக்குத் தாக்கல் செய்யும் செயற்பாடுகள் வெளிவந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ களுத்துரை நகரில் நேற்று (21) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது கூறினார்.

சட்டமா அதிபா் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனராகப் பணியாற்றும் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களினுள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.  இந்நிலையினுள் நேற்று (21) சமூக வலைத்தளத்தின் ஊடாக நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ள தில்ருக்ஷி விக்ரமசிங்க, “உங்களோடு மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை எனக்கு ஏற்படுத்தியது எந்த அமைச்சர், என்ன காரணத்திற்கு என்ற விடயங்களை மக்களுக்கு கூறுங்கள்” என அறிவித்துள்ளார்.

அவரது முகநூலில் பதிவிடப்படடுள்ள விடயம் தொடர்பில் சமூக வலைத்தளத்தினுள் கடுமையான பேச்சுக்கள் தோன்றியிருப்பதோடு, பிரதருக்கு நெருக்கமான அமைச்சர்கள் திருட்டுத் தனமாக ராஜபக்ஷக்களுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டு அவர்களுக்கு உதவி ஒத்துழைப்புக்களைச் செய்துள்ளமை இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

இது பிரதமரின் தரப்பினரால் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பிரசார ஊக்குவிப்பே என அவ்வாறான சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது முகநூல் பக்கத்தில் பதிவிடுள்ள கருத்துக்கு அமைய மிகத் தெளிவாகவே அவருக்கு நிஸ்ஸங்கவைத் தொலைபேசியில் பேசுவதற்கு தொலைபேசியை வழங்கியிருப்பது நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவராகும்.

அந்த அமைச்சர் யார் என்பதை அவர் வெளியிடாதிருப்பது தற்போது அவர்  சட்டமா அதிபர்  திணைக்களத்தின் பிரதி சொலிஸிட்டர் ஜெனரால பணியாற்றும் அரச அதிகாரி என்பதானாலாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தில்ருக்ஷியின் குரல் பதிவு : கோத்தாபயவுக்கு வாக்காளத்து வாங்கும் அந்த அமைச்சர் யார்? | Tamil Leader | We Lead the Nation