Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ஹக்கீம் மீது கை வைக்க இடமளிக்க மாட்டோம்” - நீதி அமைச்சர் தலதா

T

The Leader Desk

செப்டம்பர் 21, 2019 • 4:34 PM

ஹக்கீம் மீது கை வைக்க இடமளிக்க மாட்டோம்” - நீதி அமைச்சர் தலதா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடமளிக்கப் போவதில்லை என்றும், அவருக்காக கூட்டாக முன்நிற்பதாகவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சட்டத்தரணி தலதா அத்துகோரள தெரிவித்தார்.
  • இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, “இந்த ஜனாதிபதி முறையினை ஒழிக்க வேண்டும் என 1994ம் ஆண்டிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் வாக்குறுதியளித்தார்கள்.
  • ஆனால் இவர்கள் மூவரில் தனது அதிகாரங்களைக் குறைத்துக் கொள்வதற்கு 19வது அரசியலமைப்புத் திருத்தத்துடன் தானாகவே முன்வந்தது தற்போதைய ஜனாதிபதியாகும்.
  • ம் ஆண்டு ஒக்டோர்பர் 26ம் திகதிதான் இந்த ஜனாதிபதி முறையின் பயங்கரமான நிலையினை நாம் கண்டோம்.
எழுத்து அளவு:
இடமளிக்கப் போவதில்லை என்றும்,  அவருக்காக கூட்டாக முன்நிற்பதாகவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சட்டத்தரணி தலதா அத்துகோரள தெரிவித்தார்.  நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.


இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, “இந்த ஜனாதிபதி முறையினை ஒழிக்க வேண்டும் என 1994ம் ஆண்டிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் வாக்குறுதியளித்தார்கள். 1994ம் ஆண்டில் சந்திரிக்கா பண்டாரநாயக அம்மையார் வாக்குறுதியளித்தார். 2005ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ கூறினார். 2015ம் ஆண்டில் நாம் வெற்றி பெற வைத்த மைத்திரிபால சிரிசேனாவும் கூறினார்.

ஆனால் இவர்கள் மூவரில் தனது அதிகாரங்களைக் குறைத்துக் கொள்வதற்கு 19வது அரசியலமைப்புத் திருத்தத்துடன் தானாகவே முன்வந்தது தற்போதைய ஜனாதிபதியாகும். அவரது காலத்தினுள் இவ்விடயங்கள் இடம்பெறும் என சிலர் எதிர்பார்த்தார்கள். விஷேடமாக அவரது காலம் நிறைவடைவதற்கு முன்னர் இவ்விடயங்கள் இடம்பெறும் என்றும் சிலர் எதிர்பார்த்திருந்தார்கள்.

ஆனால் இன்று நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலுக்கான தினமும் அறிவிக்கப்பட்டிருப்பதை அனைவரும் அறிவார்கள். இதனடிப்படையில் நாம் அனைவரும் தேர்தலுக்கு ஆயத்தமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த ஜனாதிபதி முறையினை நீக்குவது அல்லது தேர்தலை நடத்தாமலிருப்பது தொடர்பில் பேசுவதை நாம் ஒருபோதும் விரும்பவில்லை.

2018ம் ஆண்டு ஒக்டோர்பர் 26ம் திகதிதான் இந்த ஜனாதிபதி முறையின் பயங்கரமான நிலையினை நாம் கண்டோம். அப்படியாயின் இதனை அப்போதே செய்திருக்கலாம். நாம் அன்று கௌரவ பிரதமரையும், எமது அரசின் அனைவரையும் பலவந்தமாக வெளியே போடுவதற்கு முயன்ற நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அன்று அரசாங்கத்தின் அனைத்து தரப்பினருடனும் இணைந்து முக்கியமாக நீதிமன்றங்களில் சுயாதீனத் தன்மையினை ஏற்படுத்தியதன் காரணமாக எவராலும் நீதிமன்றங்களுக்கு அழுத்தங்களைச் செய்ய முடியாத நிலை கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்ததனால் மீண்டும் பிரதமரையும் அரசாங்கத்தையும் நியமிக்க எம்மால் முடிந்தது என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...