Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

லலித் - குகன் காணாமல் போன சம்பவம் : கோத்தாபய இம்முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பாரா?

T

The Leader Desk

செப்டம்பர் 20, 2019 • 4:42 PM

லலித் - குகன் காணாமல் போன சம்பவம் : கோத்தாபய இம்முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பாரா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி அந்தோனிபிள்ளை பீட்டர் போல் முன்னிலையில் குறித்த வழக்கு கடந்த ஜூன் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கோத்தாபய ராஜபக்ஷ சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி எஸ்.
  • இதனால் நீதவான் இந்த வழக்கை செப்தெம்பர் 27ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
  • ம் ஆண்டு டிசம்பர் 09ம் திகதி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக லலித் மற்றும் குகன் ஆகிய அரசியல் செயற்பாட்டாளர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த வேளை காணாமல் போயிருந்தனர்.
எழுத்து அளவு:

வழக்கில் சாட்சியமளிப்பதற்காக  முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷ இம்மாதம் 27ம் திகதி யாழ்ப்பாணம்

நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமலிருப்பதற்கு ஆயத்தமாவது தெரிய வந்துள்ளதாக பெரட்டுஹாமி சமாஜவாதி கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜயகொட theleader.lk இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

தாமரை மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கடுமையான உயிர் அச்சுறுத்தல் உள்ளதால் அவரால் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்றும், எனவே இவ்வழக்கை யாழ்ப்பாணத்திலிருந்து மாற்றி கொழும்பில் விசாரணை செய்வதற்கு வசதிகளைச் செய்து தருமாறு செப்தெம்பர் 27ம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது நீதவானிடம் கோரிக்கை விடுப்பதற்கு அவரது சட்டத்தரணிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையும் தெரிய வந்துள்ளதாக புபுது ஜயகொடி மேலும் கூறினார்.

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி அந்தோனிபிள்ளை பீட்டர் போல் முன்னிலையில் குறித்த வழக்கு கடந்த ஜூன் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கோத்தாபய ராஜபக்ஷ சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி எஸ். அமரசிங்க குறிப்பிடும்போது, கோத்தாபய ராஜபக்ஷ சுகயீனமுற்று வெளிநாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதால் இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக ஆஜராகவில்லை எனக் கூறினார். இதனால் நீதவான் இந்த வழக்கை செப்தெம்பர் 27ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

2011ம் ஆண்டு டிசம்பர் 09ம் திகதி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக லலித் மற்றும் குகன் ஆகிய அரசியல் செயற்பாட்டாளர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த வேளை காணாமல் போயிருந்தனர்.  இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடமும் யாழ்ப்பாணம் நீதிமன்றம் இதற்கு முன்னர் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தது.

வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் தெரிவிக்கப்பட்ட சாட்சிகளுக்கு அமைய கோத்தாபய ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டதால் அவரையும் நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கான தேவை ஏற்பட்டதால் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

அப்போது பாதுகாப்புச் சபை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுக்கும் பொறுப்பான பிரதானியாகச் செயற்பட்டது கோத்தாபய ராஜபக்ஷவாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

லலித் - குகன் காணாமல் போன சம்பவம் : கோத்தாபய இம்முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பாரா? | Tamil Leader | We Lead the Nation