Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ரணிலின் திட்டத்துக்கு எழும்பிய எதிர்ப்பலைகள்!

T

The Leader Desk

செப்டம்பர் 19, 2019 • 6:16 PM

ரணிலின் திட்டத்துக்கு எழும்பிய எதிர்ப்பலைகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • <p> ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் முன்வைத்த யோசனைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
  • நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஜனதிபதியும் பிரதமரும் அவசர அவசரமாக எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
  • விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக விவாதங்கள் இடம்பெற்றுள்ளன இதன் போது நிறைவேற்று அதிகார ஒழிப்பு தொடர்பாக அமைச்சர் மங்கள மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
எழுத்து அளவு:

தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கு ரணில் திட்டமிட்டுள்ளார்.மைத்திரி மற்றும் மகிந்த ஆகிய இருவரும் ஓரளவு கரிசனை கொண்டுள்ளதுடன் அதன்படி அந்த ஜனாதிபதியாக மைத்திரியை தேர்வு செய்வதென்று ஒரு இணக்கப்பாட்டுக்கு ஓரளவு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

இக் கருத்துக்களுக்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்த நடாத்தப்பட்ட விசேட அமைச்சரவை கூட்டம் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது.<p>ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் முன்வைத்த யோசனைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதனை அடுத்தே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்த விசேட அமைச்சரவை கூட்டம், தீர்மானம் எட்டப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்பது ஜனாதிபதித் தேர்தல் வர்த்தமானி செய்யப்பட்ட நேரத்தில் விவாதிக்கப்படாது என்பது ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக விவாதங்கள் இடம்பெற்றுள்ளன இதன் போது நிறைவேற்று அதிகார ஒழிப்பு தொடர்பாக அமைச்சர் மங்கள மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

>இதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஒரு குழு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஜனதிபதியும் பிரதமரும் அவசர அவசரமாக எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் கூட்டமொன்று நடந்தது.இதில் கலந்துகொண்ட ரவூப் ஹக்கீம் உள்ளடங்கலான பல அமைச்சர்கள், இந்த முயற்சிக்கு கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்யும் எந்தவொரு முயற்சிகளும் வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே செய்யப்பட வேண்டுமென அவர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை அமைச்சர்களான சம்பிக்க, ஹரீன் பெர்னாண்டோ உட்பட்ட பல அமைச்சர்கள் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிகிறது.இவ்வளவு காலமும் இதனை செய்யாமல் – ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு செய்வது மக்கள் மத்தியிலும் அதிருப்தியை உண்டுபண்ணுமென அமைச்சர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டினர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...