Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

சஜித் - கரு ஒரே நிலைப்பாட்டில்: உள்ளக வாக்கெடுப்புக்கு “ரெடி”!

T

The Leader Desk

செப்டம்பர் 19, 2019 • 5:46 PM

சஜித் - கரு ஒரே நிலைப்பாட்டில்: உள்ளக வாக்கெடுப்புக்கு “ரெடி”!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரவி கருணாநாயக்கா மற்றும் ராஜித சேனாரத்ன ஆகிய கரு ஜயசூரிய தரப்பின் இரண்டு பிரதானிகளும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
  • ஐ.தே.கட்சித் தலைவரின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு ஆயத்தமாக இருக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய, பெரும்பான்மையினரின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
  • இங்கு வாக்கெடுப்பை நடாத்துவதற்கான நிலை ஏற்பட்டால் சபாநாயகர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்றும் அமைச்சர் கிரியெல்ல சுட்டிக் காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

தெரிவு செய்து கொள்வதற்காக இரகசிய வாக்கெடுப்பை நடாத்துமாறு சஜித் தரப்பினர் இதற்கு முன்னர் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்திருந்ததோடு, கரு ஜயசூரயி தரப்பினரும் நேற்று இவ்வாறான கோரிக்கையினை விடுப்பதற்கான ஆயத்தத்தில் இருந்ததாக உள்ளக வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

செயற்குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இரகசிய வாக்கெடுப்பொன்றை நடாத்துமாறு சஜித் தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தாலும், வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான அதிகாரம் செயற்குழுவிற்கே உள்ளதால் இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரை அழைக்கத் தேவையில்லை என பிரதமரின் ஆலோசனைக்கு அமைய கரு ஜயசூரிய தரப்பினர் தெரிவித்துள்ளனர். ரவி கருணாநாயக்கா மற்றும் ராஜித சேனாரத்ன ஆகிய கரு ஜயசூரிய தரப்பின் இரண்டு பிரதானிகளும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஸ்ரீ.ல.சு.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இழுபறி தொடர்பில் கேட்ட போது, அடுத்த ஓரிரு தினங்களில் கட்சியின் செயற்குழுவினைக் கூட்டி வேட்பாளரைத் தெரிவு செய்ய உள்ளதாக அவர் பதிலளித்துள்ளார். இங்கு வாக்கெடுப்பை நடாத்துவதற்கான நிலை ஏற்பட்டால் சபாநாயகர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்றும் அமைச்சர் கிரியெல்ல சுட்டிக் காட்டியுள்ளார்.

ஐ.தே.கட்சித் தலைவரின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு ஆயத்தமாக  இருக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய, பெரும்பான்மையினரின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார். எனினும் இதற்கு முன்னர் அவர் தொடர்ந்தும் கூறும் போது கட்சியின் பெரும்பான்மையினரின் விருப்பம்  கிடைத்தால் மாத்திரமே தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க  ஆயத்தமாக உள்ளதாகவும் கூறினார்.

சம்பிக்க கூறிய கதை!

இதனிடையே ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 106 பேரில் அதிகமானோரின் வாக்குகளினால் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை உடனடியாகத் தெரிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சஜித் - கரு ஒரே நிலைப்பாட்டில்: உள்ளக வாக்கெடுப்புக்கு “ரெடி”! | Tamil Leader | We Lead the Nation