Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

T

The Leader Desk

செப்டம்பர் 18, 2019 • 5:08 PM

ஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைப்பெறும் என்றும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று மாலை தெரிவித்திருந்தார்.
  • அத்துடன் அங்கத்துவம் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பொது சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தனித்தோ, அல்லது சுயாதீனமாகவோ தேர்தலில் போட்டியிடுவதாக தமது கட்சி மட்டத்தில் அறிவித்துள்ளனர்.
  • இதையடுத்து அலரி மாளிகையை நோக்கி ஐ.தே.கவின் எம்.பிக்கள் தற்போது படையெடுத்து < வருகின்றார்கள்.
எழுத்து அளவு:

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல்  நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைப்பெறும் என்றும் இதற்கான  வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று மாலை தெரிவித்திருந்தார்.

இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்த நிலையிலேயே இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இம் முறை ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் உட்பட சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக 17 பேர் போட்டியிடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபய ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக  அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க போட்டியிட உள்ளதாக இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அத்துடன்  அங்கத்துவம் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பொது சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தனித்தோ, அல்லது சுயாதீனமாகவோ தேர்தலில் போட்டியிடுவதாக தமது கட்சி மட்டத்தில் அறிவித்துள்ளனர். எவ்வாறு இருப்பினும்  இம்முறை மாறுப்பட்ட விதத்தில் 17 பேர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளமை முக்கிய அம்சமாகும்

இது இவ்வாறிருக்க, ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடன் தன்னைச் சந்திக்குமாறு கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர அழைப்பு விடுத்துள்ளார்.. இதையடுத்து அலரி மாளிகையை நோக்கி ஐ.தே.கவின் எம்.பிக்கள் தற்போது படையெடுத்து <வருகின்றார்கள்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...