Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

சிங்கள - பௌத்த இராஜ்ஜியம்: ஞானசார தேரரிடமிருந்து கோத்தாபயவுக்கு ஒரு “சைட் சபோட்

T

The Leader Desk

செப்டம்பர் 17, 2019 • 5:43 PM

சிங்கள - பௌத்த இராஜ்ஜியம்: ஞானசார தேரரிடமிருந்து கோத்தாபயவுக்கு ஒரு “சைட் சபோட்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இது தொடர்பில் அனைத்து சிங்களவர்களினதும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
  • நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய “தேசிய தலைவர்” ஒருவரை உருவாக்குவதேயாகும்.
  • சிங்களவர்கள் உதாசீனப்படுத்தப்பட்டு பெயரளவிலான சிங்களவர் ஒருவர் அதிகாரத்திலிருப்பதில் எந்தப் பலனுமில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்,  இது தொடர்பில் அனைத்து சிங்களவர்களினதும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

சிங்களவர்கள் உதாசீனப்படுத்தப்பட்டு பெயரளவிலான சிங்களவர் ஒருவர் அதிகாரத்திலிருப்பதில் எந்தப் பலனுமில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.  பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்த இளைஞர்களுடனான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார்.  இந்த செயலமர்வு கடந்த சனிக்கிழமை நுகேகொட ஆனந்த சமரகோன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய ஞானசார தேரர், பௌத்த பிக்குகளின் கடமை, இருக்கின்ற கட்சிகளுக்கு தலைவர்களைத் தேடுவதல்ல. நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய “தேசிய தலைவர்” ஒருவரை உருவாக்குவதேயாகும்.

அவர் இவ்வாறு கூறியிருப்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுது “தேசிய தலைவராக” என அறிவிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே என்பது முக்கிய விடயமாகும்.

கோத்தாபய ராஜபக்ஷ இந்த தோ்தலில் போட்டியிடுவது “தேசிய தலைவராக” வே என அவரது ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மாத்தரை மாவட்ட ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுணவின் வியாபாரிகள் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறியதாக கோத்தாபயவின் சிரேஷ்ட ஆலோசகர் திலித் ஜயவீரவின் “அத தெரண” இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும் பொதுபல சேனாவின் இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய ஞானசார தேரர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,

“எமது நாடும், இனமும், பௌத்த சமயமும் மோசமான ஆபத்துக்கள் பலவற்றிற்கு முகங்கொடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில் நுகோகொடையில் கூடியிருக்கும் உங்கள் அனைவரையும் பார்க்கும் போது எனக்கு மிகுந்த உற்சாகமாக உள்ளது. அதே போன்று மகிழ்ச்சியும், உங்களது எதிர்பார்ப்புக்களுடன் கூடிய முகங்களைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த வேதனையும், கவலையும் ஏற்படுகின்றது. எனக்கு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுவது பல வருடங்களாக எமது தாய் நாட்டைப் பாதுகாத்த உயர்ந்த மனிதர்கள் இன்னமும் உயிர்வாழ்கின்றார்கள் என்பதை பார்க்கும் போதுதான்.  என்றும் இந்நாடு முகங்கொடுத்த பலவிதமான எதிரிகளின் மோசமான அழிவுகளிலிருந்து எமது நாட்டைப் பாதுகாத்தது உங்களைப் போன்றே நாட்டுக்கும், இனத்திற்கும், பௌத்த சாசனத்திற்கும் எல்லையற்ற பற்றைக் கொண்டிருந்தவர்களாகும்.  அந்தப் பரம்பரை எமக்கும், நாட்டிற்கும் பௌத்த சாசனத்திற்கும் மிகுந்த பலமும், பெருமையுமாகும்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சிங்கள - பௌத்த இராஜ்ஜியம்: ஞானசார தேரரிடமிருந்து கோத்தாபயவுக்கு ஒரு “சைட் சபோட் | Tamil Leader | We Lead the Nation