Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

நான் வேட்பாளராவேன் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கையுள்ளது! சஜித்

T

The Leader Desk

செப்டம்பர் 17, 2019 • 5:26 PM

நான் வேட்பாளராவேன் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கையுள்ளது! சஜித்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வீட்டில் நடைபெற்று வரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் சஜித் இந்தத் தகவலை வெளியிட்டார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு நேற்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
  • எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ள ஜனநாயகத்தையும், பொது மக்களின் எண்ணங்களையும் முதன்மைப்படுத்தி நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் ஜனாதிபதி தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வருகிறது.
  • ஜனநாயக முறையில் இந்த விடயம் தொடர்பில் தீர்மானிக்குமாறு கூறினேன்.
எழுத்து அளவு:

வீட்டில் நடைபெற்று வரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் சஜித் இந்தத் தகவலை வெளியிட்டார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு நேற்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக முறையில் இந்த விடயம் தொடர்பில் தீர்மானிக்குமாறு கூறினேன். மீண்டும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இந்த விடயத்தை தெளிவுப்படுத்தவே நான் தீர்மானித்தேன். ஐக்கிய தேசிய கட்சி என்பது ஜனநாயக கட்சியாகும். வேறு கட்சிகளை போன்று குடும்பத்தினர், ஒரு தரப்பினர் மற்றும் தங்களுக்கு அவசியமான முறையில் ஐக்கிய தேசிய கட்சி தீர்மானிக்காது.

புரிந்துணர்வு, நட்பு, ஜனநாயகம் போன்றவற்றை கருத்தில் கொண்டே வேட்பாளரை தீர்மானிப்போம். எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ள ஜனநாயகத்தையும், பொது மக்களின் எண்ணங்களையும் முதன்மைப்படுத்தி நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும்  ஜனாதிபதி தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வருகிறது. இந்நிலையில் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர் தொடர்பான தீர்மானம் வெகு விரைவில் முன்னெடுக்கப்படும் என்பதனை நான் கூறிக்கொள்கின்றேன்

.நான் வேட்பாளராவேன் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கையுள்ளது. பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையிலேயே தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன். நேற்றைய கடிதத்தில் எனது எண்ணங்கள் மற்றும் விருப்பங்கள் தொடர்பிலேயே குறிப்பிட்டுள்ளேன். யாராக இருந்தாலும் உடனடியாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமியுங்கள் என்பதே எனது கோரிக்கையாக வைக்கப்பட்டது

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இரகசிய வாக்கெடுப்பு ஒன்றிற்கு செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வெகு விரைவில் இதற்கான முடிவு வெளியாகும். கூட்டமைப்புடன் ழுழுமையான சந்திப்பு ஒன்றை நடத்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி யாழப்பாணத்தில் இடம்பெற்ற போது கூட்டமைப்புடன் மேலோட்டமான கலந்துரையாடல்களே மேற்கொள்ளப்பட்டன.எது எப்படியிருந்தாலும் இறுதியில் நாட்டு மக்களின் கருத்திற்கு செவி சாய்த்து, கட்சியின் தலைவருடன் இணைந்து செயற்படவே விரும்புகிறேன் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நான் வேட்பாளராவேன் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கையுள்ளது! சஜித் | Tamil Leader | We Lead the Nation