Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

இனியும் மெளனம் காக்க முடியாது களமிறங்கியே தீருவேன் என்கிறார் சஜித்

T

The Leader Desk

செப்டம்பர் 16, 2019 • 3:40 PM

இனியும் மெளனம் காக்க முடியாது களமிறங்கியே தீருவேன் என்கிறார் சஜித்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நாட்டில் புதிய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.
  • அதற்கான முயற்சிகளையே நாம் இப்போது முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
  • இப்போது ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் எமது அரசாங்கத்தை மேலும் பலபடுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது.
எழுத்து அளவு:

என்னால் மௌனமாக அரசியல் செய்ய முடியாது, இப்போது எனக்கான நேரமும் காலமும் வந்துவிட்டது அதற்கமைய இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியே தீருவேன் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச கூறுகின்றார். 

கடுவன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

இந்த நாட்டில் புதிய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. இப்போது ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் எமது அரசாங்கத்தை மேலும் பலபடுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் எமக்கான அரசாங்கத்தை அமைத்து பிரதமர் -ஜனாதிபதி என நாமே ஆட்சியை நடத்தி இந்த நாட்டினை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான முயற்சிகளையே நாம் இப்போது முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை உடன் பெயரிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூல கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்தும் காலம் தாழ்த்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.. இவ்வாறு காலம் தாழ்த்துவதனால் நாட்டு மக்களுக்கும் கட்சிக்கும் அது பாதக நிலைமையை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இனியும் மெளனம் காக்க முடியாது களமிறங்கியே தீருவேன் என்கிறார் சஜித் | Tamil Leader | We Lead the Nation