அதனைச் செய்ய முடியாது போனால் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பியகம மற்றும் களனி தேர்தல் தொகுதிகளின் ஐக்கிய தேசிய கட்சியின் பழைய உறுப்பினர்களை கொழும்பு அலறி மாளிகையின் சந்தித்த போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
70 வயதாகும் வரையில் இலங்கை அரசயில் துறையில் பல்வேறு பதவிகளை வகித்த தனக்கு அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது அந்தளவுக்கு சிரமமானது அல்ல என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் நியமனம் கிடைக்காவிட்டால் தான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக வார இறுதி பத்திரியும் செய்தி வெளியிட்டுள்ளது.
ரணில், சஜித்துடன் வாக்கெடுப்புக்கு வரமாட்டார்!
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வாக்கெடுப்பொன்று நடாத்தப்பட்டால் அதனால் கட்சி இரண்டாகப் பிளவுபடுவதற்கான ஆபத்து காணப்படுவதால் அதற்கு இடமளிக்காமலிருப்பதற்கு ஐ.தே.கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் யாப்புக்கு அமைய இவ்வாறான சந்தர்ப்பத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய தேவை இல்லை என்றும் ரணில் சார்பானவர்களின் கருத்தாக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
ஐ.தே.கட்சியின் செயற்குழு 90 பேருக்கு அதிகமானவர்கள் அங்கத்துவம் வகிக்க வேண்டியுள்ள போதிலும் தற்போது அக்குழுவில் 63 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் மூன்றில் இரண்டுக்கும் அதிகமானோர் இதுவரையில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என பகிரங்கமாகவே கூறியுள்ள நிலையினுள் பிரதமர் கட்சியின் தலைவர் என்ற வகையில் அவருக்குள்ள அதிகாரங்களின் கீழ் தனக்குச் சார்பான 30 பேரை புதிதாக செயற்குழுவில் இணைத்துக் கொண்டு அதன் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இதுவரையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே மூன்றில் இரண்டுக்கும் அதிகமானோர் சஜித் பிரேமதாச அபேட்சகராக நியமிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளனர்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக ஆக்குமாறு குறிப்பிட்டு கடிதம் ஒன்றில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டுள்ளதோடு, அவர்கள் அதனை அடுத்த சில தினங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் வீட்டுக்குச் செல்கிறாராம்! சஜித்துடன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமாட்டார்!!
T
The Leader Desk
செப்டம்பர் 15, 2019 • 5:26 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அதனைச் செய்ய முடியாது போனால் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
- இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் நியமனம் கிடைக்காவிட்டால் தான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாக வார இறுதி பத்திரியும் செய்தி வெளியிட்டுள்ளது.
- ஐ.தே.கட்சியின் செயற்குழு 90 பேருக்கு அதிகமானவர்கள் அங்கத்துவம் வகிக்க வேண்டியுள்ள போதிலும் தற்போது அக்குழுவில் 63 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

