Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

கிசாகோதமின் தலைமுறை..... தூய்மையான தலைவரைத் தேடப்படுகின்றனர்...

T

The Leader Desk

செப்டம்பர் 15, 2019 • 5:17 PM

கிசாகோதமின் தலைமுறை..... தூய்மையான தலைவரைத் தேடப்படுகின்றனர்...

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • Sub Title அரசியலுடன் தொடர்பில்லாத மாற்று ஜனாதிபதியின் தேவை.
  • அரச நிறுவனத்திற்கு, அரச வைத்தியசாலைக்குச் சென்றாலும் தெரிந்தவர்களைப் பிடித்து வரிசையில் நிற்காமல் முன்னால் சென்று தனது வேலையைச் செய்து கொள்ளும்.
  • வாகனத்தை விற்பதற்குச் சென்றாலும் 50 ஆயிரம் கிலோ மீற்றர் ஓடியிருந்தாலும் அதனை 25 ஆயிரம் கிலோ மீற்றராகக் குறைத்து புதிய வாகனம், அதிகம் ஓடவில்லை, வீட்டில்தான் இருந்தது எனக் கூறும்.
  • “அரசியல்வாதிகள் 71 வருடங்களாக நாட்டை நாசமாக்கிவிட்டார்களாம்”.
எழுத்து அளவு:


Sub Title
அரசியலுடன் தொடர்பில்லாத மாற்று ஜனாதிபதியின் தேவை...

பிள்ளை பிறப்பதற்கு முன்னர் பாடாலையில் சேர்ப்பதற்கு திருட்டுத்தனமாக முகவரி உருவாக்கும்...

பிள்ளை தொழிலுக்காக Interview க்குச் செல்லும்போது தனக்குத் தெரிந்த அனைத்து தலைவர்களிடமும் கைகூப்பி வணங்கியாவது தனது பிள்ளைக்கு மாத்திரம் சான்ஸ் பெறுவதற்கு ட்ரை பண்ணும்....
வாகனத் தவறுகளைச் செய்து பொலிஸாரிடம் அகப்பட்டுக் கொண்டால் தெரிந்த அனைவரிடத்திலும் கூறி  எப்படியாவது தப்பித்துக் கொள்ள முயலும்...
வாகனத்தில் மோதி Insurance ஐ பெறச் செல்லும் போது எப்படியாவது அதிகளவு Estimate போட்டு எவ்வளவாவது கொள்ளையடித்துக் கொள்ள....
அலுவலகத்தில் O.T போடும் போது அதிகளவு மணித்தியாலங்களையாவது திருட்டாகப் போட்டுக் கொள்ள...

Medical ஒன்று போட்டாலும் அதிகளவு தொகையினைப் போட்டுக் கொள்ள....

அரச நிறுவனத்திற்கு, அரச வைத்தியசாலைக்குச் சென்றாலும் தெரிந்தவர்களைப் பிடித்து வரிசையில் நிற்காமல் முன்னால் சென்று தனது வேலையைச் செய்து கொள்ளும்....

காணியை, வீட்டை வாங்கச் சென்றாலும் உறுதியை குறைவாக எழுதி அரசாங்கத்திற்கு குறைவாக முத்திரை கட்டணத்தைச் செலுத்தும்....

வீட்டு Plan ல் என்ன தவறிருந்தாலும் நகர சபைக்கு தொகை ஒன்றைக் கொடுத்து அதனை அனுமதித்துக் கொள்ள...

வாகனத்தை விற்பதற்குச் சென்றாலும் 50 ஆயிரம் கிலோ மீற்றர் ஓடியிருந்தாலும் அதனை 25 ஆயிரம் கிலோ மீற்றராகக் குறைத்து புதிய வாகனம், அதிகம் ஓடவில்லை, வீட்டில்தான் இருந்தது எனக் கூறும்....

மனிதர்கள்.....

சனிக்கிழமை காலையிலேயே எழுந்து குப்பைகளை வீதியின் அருகில் மெதுவாக வைத்துவிட்டு, O.T செய்வதற்காக அலுவலகத்திற்குச் சென்று ஒப்பமிட்டுவிட்டு பகலில் பிள்ளைகளை பிரத்தியேக வகுப்புக்களில் விட்டுவிட்டு, வீட்டுக்கு டைல்ஸூம் பார்க்கச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு, மாலையில் மீண்டும் அலுவலகம் சென்று, பிள்ளைகளின் பாடசாலைக்கு கொண்டுவரச் சொன்ன Print outs களையும், Photo Copy களையும் அலுவலகத்திலேயே எடுத்துக் கொண்டு, O.T யை வெற்றிகரமாக நிறைவு செய்து கொண்டும் வீட்டுக்குச் செல்லும் முகநூலில் இவ்வாறு ஒரு பதிவை போடுகிறார்.....

“அரசியல்வாதிகள் 71 வருடங்களாக நாட்டை நாசமாக்கிவிட்டார்களாம்” ....
“எனவே அரசியலோடு தொடர்பில்லாத மாற்று தலைவரை 2020ம் ஆண்டில் கொண்டு வருவோமாம்”....

சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த பதிவிலிருந்து எடுக்கப்பட்டது)

நன்றி - குசல் பெரேராவுக்கு
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...