Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

தமிழ், முஸ்லிம், சிங்கள பங்காளிக் கட்சிகளின் ஆதரவை பெற்றுவிட்டதாக சஜித் தெரிவிப்பு

T

The Leader Desk

செப்டம்பர் 15, 2019 • 5:08 PM

தமிழ், முஸ்லிம், சிங்கள பங்காளிக் கட்சிகளின் ஆதரவை பெற்றுவிட்டதாக சஜித் தெரிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச, கட்சிக்குள் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்றும் கூறினார்.
  • இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் குறித்து வினவிய போதே அவர் இவற்றைக் கூறினார். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கும் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
  • இந்த சந்திப்பு அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்றது.
எழுத்து அளவு:

பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச, கட்சிக்குள் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்றும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முன்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் ஆதரவை பெற்றுகொள்ளுமாறு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தெரிவித்தமைக்கு அமைய பிரதித் தலைவர் பங்காளிக்கட்சிகள் மற்றும் தமிழ் முஸ்லிம் கட்சிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி  தமக்கான ஆதரவை திரட்டி வருகின்றார். 

இந்நிலையில் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச  நேற்று முன்தினம்  ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பு அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் குறித்து வினவிய போதே அவர் இவற்றைக் கூறினார். 

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கும் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்வரும் தினங்களில் அவர்களையும் சந்தித்து எமக்கான ஆதரவுகளை பெற்றுக்கொள்ள நடவைக்கை எடுப்போம் என்றும் அவர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தமிழ், முஸ்லிம், சிங்கள பங்காளிக் கட்சிகளின் ஆதரவை பெற்றுவிட்டதாக சஜித் தெரிவிப்பு | Tamil Leader | We Lead the Nation