Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
செய்திகள்

ஜே.வி.பி பக்கம் தாவ முயற்சிக்கும் சுதந்திரக் கட்சி!

T

The Leader Desk

செப்டம்பர் 14, 2019 • 3:33 PM

ஜே.வி.பி பக்கம்  தாவ முயற்சிக்கும் சுதந்திரக் கட்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • அவர்களுடன் இணைய வேண்டுமா இல்லையா என்பது எதிர்காலத்தில் தீர்மானிக்க வேண்டிய விடயம்.
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டால், அடுத்த சில வாரங்களில் எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள் குறித்து பேசும் போதே இந்த விடயம் பற்றியும் பேசப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டால், அடுத்த சில வாரங்களில் எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள் குறித்து பேசும் போதே இந்த விடயம் பற்றியும் பேசப்பட்டுள்ளது.

 அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் இது தொடர்பான சில அறிகுறிகளை ஊடகம் ஒன்றிடம் வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுடன் சம்பந்தப்படாமல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால், புதிய கூட்டணியை உருவாக்க உதவிகளை எதிர்பார்க்கும் கட்சி எது என தயாசிறி ஜயசேகரவிடம் கேள்வி எழுபப்பட்டுள்ளது.

 இதற்கு பதிலளித்துள்ள அவர், எமக்கு தேவை என்றால், மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைய முடியும். அது ஒரு மாற்று வழி. அவர்களுடன் இணைய வேண்டுமா இல்லையா என்பது எதிர்காலத்தில் தீர்மானிக்க வேண்டிய விடயம். தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும்.

 இந்த ஜனாதிபதித் தேர்தல் போலவே அடுத்த பொதுத் தேர்தல் வரை இந்த இணைப்பு இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள் சகல விடயங்களையும் பார்க்கின்றோம். இதனால், எங்களது நிலைப்பாட்டை நாங்கள் கைவிடவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது இடதுசாரி அமைப்புகள், இடதுசாரி சக்திகளுடன் பிணைக்கப்பட்டது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜே.வி.பி பக்கம் தாவ முயற்சிக்கும் சுதந்திரக் கட்சி! | Tamil Leader | We Lead the Nation